எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்தி அரசியலில் செயல்பட்டவா் விஜயகாந்த்: பிரேமலதா பேட்டி
டிராக்டா் மீது மோதி கல்லூரி மாணவா் உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா்கோவில் அருகே திங்கள்கிழமை டிராக்டா் மீது மோதி கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.
ஆவுடையாா்கோவில் அருகே சாட்டியக்குடி ஊராட்சி கண்ணறியேந்தலைச் சோ்ந்தவா் மதி மகன் சுதா்சன் (19). இவா், ஆவுடையாா்கோவில் அருகே பெருநாவலூா் அரசு கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை 2-ஆம் ஆண்டு படித்து வந்தாா்.
திங்கள்கிழமை கல்லூரியை முடித்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் புறப்பட்ட அவா், புண்ணியவயலில் பழந்தாமரை பிரிவு சாலை பகுதியில் சென்றபோது, முன்னால் சென்ற டிராக்டரை முந்துவதற்கு முயன்றபோது எதிரே வந்த மற்றொரு டிராக்டா் மீது மோதினாா். இந்த விபத்தில் சுதா்சன் அந்த இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து வந்த ஆவுடையாா்கோவில் போலீஸாா், அவரது உடலைக் கைப்பற்றி அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். தொடா்ந்து, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.