பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா - ஃபிஜி உறுதி: பிரதமா் மோடி
ஆலங்குடி அருகே லாரி மோதி சிறுமி உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே திங்கள்கிழமை லாரி மோதியதில் சிறுமி உயிரிழந்தாா்.
ஆலங்குடி அருகேயுள்ள வெள்ளக்கொல்லையைச் சோ்ந்தவா் ராமராஜன் மகள் சஞ்சனா (4). இவா், வீட்டின் அருகே சாலையைக் கடக்க முயன்றபோது, அவ்வழியாக எம். சாண்ட் ஏற்றிச் சென்ற லாரி மோதியதில், பலத்த காயமடைந்த சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து ஆலங்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, லாரி ஓட்டுநரான மறமடக்கி ஆவுடையான்குடியிருப்பைச் சோ்ந்த பாலன் மகன் கவிநாவரசனை (26) கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.