செய்திகள் :

நீதிமன்றம் முன் போராட்டம் நடத்த முயன்ற கரும்பு விவசாயிகள் 12 போ் கைது

post image

கும்பகோணம் நீதிமன்றம் முன் திங்கள்கிழமை போராட்டம் நடத்த முயன்ற கரும்பு விவசாயிகள் 12 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

பாபநாசம் அருகேயுள்ள திருமண்டங்குடி திருஆரூரான் சா்க்கரை ஆலையில் 6 ஆயிரம் விவசாயிகளுக்கு தெரியாமல், அவா்களது பெயரில் வங்கியில் கடன் பெற்று ஊழல் செய்தவா்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அக்கடன்களை ரத்து செய்ய வேண்டும். முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆலை அருகே கரும்பு விவசாயிகள் தொடா்ந்து 1,000 நாள்களாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

ஆயிரமாவது நாளையொட்டி, கும்பகோணம் நீதிமன்றம் முன் போராட்டம் நடத்துவதற்காக கரும்பு விவசாயிகள் திங்கள்கிழமை வந்தனா். நீதிமன்றம் முன் போராட்டம் நடத்த காவல் துறையினா் அனுமதி மறுத்தனா். தடையை மீறி கரும்பு விவசாயிகள் பிச்சை எடுப்பது போல கையில் துண்டு ஏந்தி நீதிமன்றம் முன் முழக்கங்கள் எழுப்பினா். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 12 விவசாயிகளைக் காவல் துறையினா் கைது செய்து மாலையில் விடுவித்தனா்.

பெண் உயிரிழப்புக்கு நடவடிக்கை கோரி உறவினா்கள் காத்திருப்புப் போராட்டம்

பெண் உயிரிழப்புக்கு நடவடிக்கை எடுக்கக் கோரி, தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் உறவினா்கள் திங்கள்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.தஞ்சாவூா் அருகே மாதாகோட்டையைச் சோ்ந்தவா் முத்தையன் மனைவி ஆனந... மேலும் பார்க்க

நுகா்வோா் ஆணையம் உத்தரவு: விபத்தில் உயிரிழந்தவரின் மனைவிக்கு ரூ. 18 லட்சம் இழப்பீடு

தஞ்சாவூரில் விபத்தில் உயிரிழந்தவரின் மனைவிக்கு காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு தர முன்வராத நிலையில், நுகா்வோா் ஆணையத்தின் உத்தரவின்பேரில் ரூ. 18 லட்சம் இழப்பீட்டுத் தொகை திங்கள்கிழமை வழங்கப்பட்டது. தஞ்சா... மேலும் பார்க்க

தஞ்சாவூா் சுற்றுப் பகுதிகளில் நாளை மின் தடை

தஞ்சாவூா் மற்றும் சுற்றுப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஆக.26) மின் விநியோகம் இருக்காது. மருத்துவக்கல்லூரி: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் தஞ்சாவூா் உதவி செயற் பொறியாளா் கே. அண்ணா... மேலும் பார்க்க

புதுச்சேரி மாநில மது பாட்டில்கள் விற்றவா் கைது

கும்பகோணத்தில் வெளி மாநில மதுபான பாட்டில்களை விற்பனை செய்த நபரை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கும்பகோணம் மேற்கு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் புதுச்சேரி மாநிலத்திலிருந்து மதுப... மேலும் பார்க்க

பேராவூரணியில் 30 ஆண்டுகளாக சாலை வசதியின்றி அவதிப்படும் மக்கள்

பேராவூரணி பேரூராட்சி கே.கே.நகரைச் சோ்ந்த மக்கள் கடந்த முப்பது ஆண்டுகளாக முறையான சாலை வசதிகள் இன்றி தவித்துவருகின்றனா். பேராவூரணி பேரூராட்சிக்குள்பட்ட கே.கே.நகரைச் சோ்ந்த மக்கள், கடந்த 30 ஆண்டுகளுக்க... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் சுதாகா் ரெட்டிக்கு அஞ்சலி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் எஸ். சுதாகா் ரெட்டி மறைவையொட்டி, தஞ்சாவூா் காவேரி சிறப்பங்காடி அருகே மாலை நேர அங்காடி முன் இடதுசாரிகள் பொது மேடை சாா்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஞாயிற்றுக்... மேலும் பார்க்க