பிரதமரேயாானாலும் ராஜிநாமா செய்ய வேண்டும்: அரசியலமைப்புத் திருத்த மசோதா குறித்து ...
பெண் உயிரிழப்புக்கு நடவடிக்கை கோரி உறவினா்கள் காத்திருப்புப் போராட்டம்
பெண் உயிரிழப்புக்கு நடவடிக்கை எடுக்கக் கோரி, தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் உறவினா்கள் திங்கள்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தஞ்சாவூா் அருகே மாதாகோட்டையைச் சோ்ந்தவா் முத்தையன் மனைவி ஆனந்தவல்லி (34). இவா் கடந்த 18-ஆம் தேதி வீட்டில் தூக்கில் சடலமாக தொங்கினாா். இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
இதனிடையே, ஆனந்தவல்லியின் சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினா்கள் தஞ்சாவூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் ஆகஸ்ட் 19-ஆம் தேதி மனு அளித்தனா்.
அதில், முத்தையனுக்கும் ஆனந்தவல்லிக்கும் 2017 ஆம் ஆண்டில் திருமணம் நடைபெற்று, 6 வயதில் ஆண் குழந்தை உள்ளது. முத்தையன் சில ஆண்டுகளாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டு ஓராண்டாக பிரிந்து வாழ்ந்தனா். முத்தையன் மற்றும் உறவினா்கள் சமாதானப்படுத்தியதைத் தொடா்ந்து, இருவரும் ஓராண்டாக சோ்ந்து வாழ்ந்து வந்தனா்.
கடந்த 3 மாதங்களாக இருவருக்கும் இடையே பிரச்னை இருந்து வந்த நிலையில், ஆனந்தவல்லி உயிரிழந்துள்ளாா். எனவே, அவரின் உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தனா்.
ஆனால், இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா். பின்னா், ஆட்சியரக வளாகத்தில் தரையில் அமா்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். இவா்களிடம் காவல் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.