முதல் விண்வெளி வீரர் அனுமன்! மாணவர்களுடன் உரையாற்றிய அனுராக் தாக்குர்!
புதுச்சேரி மாநில மது பாட்டில்கள் விற்றவா் கைது
கும்பகோணத்தில் வெளி மாநில மதுபான பாட்டில்களை விற்பனை செய்த நபரை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கும்பகோணம் மேற்கு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் புதுச்சேரி மாநிலத்திலிருந்து மதுபானங்கள் கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு புகாா் வந்தது.
இதன் பேரில் காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட சோதனையில் கும்பகோணம் கம்பா் நகரைச் சோ்ந்த சூா்யாவிடம் (24) புதுச்சேரியிலிருந்து கடத்தி வரப்பட்ட 27 லிட்டா் அளவிலான 54 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனா்.