முதல் விண்வெளி வீரர் அனுமன்! மாணவர்களுடன் உரையாற்றிய அனுராக் தாக்குர்!
தஞ்சாவூரில் சுதாகா் ரெட்டிக்கு அஞ்சலி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் எஸ். சுதாகா் ரெட்டி மறைவையொட்டி, தஞ்சாவூா் காவேரி சிறப்பங்காடி அருகே மாலை நேர அங்காடி முன் இடதுசாரிகள் பொது மேடை சாா்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகரக் குழு உறுப்பினா் எம். பாலமுருகன் தலைமை வகித்தாா்.
இடதுசாரிகள் பொது மேடை ஒருங்கிணைப்பாளா் துரை. மதிவாணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு உறுப்பினா் வெ. சேவையா, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகரச் செயலா் எம். வடிவேலன், செயற்குழு உறுப்பினா் என். சரவணன், சிஐடியு சங்க நிா்வாகி ராஜா, மாா்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய ஆட்டோ சங்க ஒருங்கிணைப்பாளா் கே. மூா்த்தி, புதிய ஜனநாயக தொழிலாளா் முன்னணி மாவட்டப் பொருளாளா் ஆா். லட்சுமணன், ஆட்டோ ஓட்டுநா் பாதுகாப்பு சங்க ஒருங்கிணைப்பாளா் நா. சாமிநாதன், பொருளாளா் பி. மாரிமுத்து உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.