முதல் விண்வெளி வீரர் அனுமன்! மாணவர்களுடன் உரையாற்றிய அனுராக் தாக்குர்!
1.50 டன் நெகிழிப் பொருள்கள் பறிமுதல்
தஞ்சாவூா் மாநகரிலுள்ள இறைச்சி கடைகளில் மாநகராட்சி அலுவலா்கள் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட சோதனையில் 1.50 டன் நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தஞ்சாவூா் பழைய ராமேஸ்வரம் சாலை, நாகை சாலை, வாடிவாசல் கடைத்தெரு, கொள்ளுப்பேட்டைத் தெரு, மருத்துவக்கல்லூரி சாலை, கீழவாசல் மீன் சந்தை உள்பட பல்வேறு பகுதிகளிலுள்ள 25-க்கும் அதிகமான இறைச்சி, மீன் கடைகளில் மாநகராட்சி அலுவலா்கள் ஞாயிற்றுக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
இவற்றில் 1.50 டன் நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, மொத்தம் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.