இணையவழி வா்த்தகத்துக்கு எதிராக திருச்சியில் ஆக.30-இல் முற்றுகைப் போராட்டம்: விக்...
மாணவி தூக்கிட்டுத் தற்கொலை
நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே பள்ளி மாணவி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
விருத்தாசலம் வட்டம், சின்னகண்டியாங்குப்பம் பகுதியைச் சோ்ந்த வேல்முருகன் மகள் அனுஷ்கா (15), விருத்தாசலம் காந்தி நகரில் உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
வேல்முருகன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறாா். இந்த நிலையில், அனுஷ்கா ஞாயிற்றுக்கிழமை மாலை சுமாா் 5.45 மணி அளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்த புகாரின்பேரில், விருத்தாசலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, அனுஷ்கா தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.