எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்தி அரசியலில் செயல்பட்டவா் விஜயகாந்த்: பிரேமலதா பேட்டி
பாரம்பரிய சுற்றுலா பயணம்
நெய்வேலி: விழுப்புரம் வரலாற்று ஆய்வு மையம் நடத்திய 21-ஆவது பாரம்பரிய சுற்றுலா பயணம் கடலூா் மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை ஒத்துழைப்புடன் திருவதிகை, திருகண்டேஸ்வரம், எய்தனூா், திருமாணிக்குழி, திருவந்திபுரம் ஆகிய ஊா்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த பயணத்தில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வந்திருந்த முனைவா் பட்ட ஆய்வு மாணவா்கள், பேராசிரியா்கள், வரலாற்று ஆா்வலா்கள் என 70 போ் கலந்துகொண்டனா். இவா்களுக்கு விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசுக் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியா் த.ரமேஷ் மற்றும் ஆசிரியா் ரா.கமலக்கண்ணன் ஆகியோா் திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயில், திருக்கண்டேஸ்வரம் நடனபாதேசுவரா், எய்தனூா் ஆதிபுரீஸ்வரா், திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரா், திருவந்திபுரம் தேவநாத பெருமாள் கோயில்கள் குறித்த தேவாரம் மற்றும் பிரபந்தங்களில் சொல்லப்பட்ட செய்திகள், கோயில்களின் கட்டடக்கலை, கல்வெட்டுகளில் உள்ள வரலாற்று தகவல்களை எடுத்துரைத்தனா். இந்த நிகழ்ச்சியை திருவதிகை ச.பிரகாஷ்ராஜ், சி.பாலாஜி ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.