கரும்பலகையில் இருந்து கைப்பேசிக்கு மாறிவிட்டது கல்வி: மத்திய அமைச்சா் ராஜ்நாத் ச...
ஷூ அணிந்தபோது மாணவரை கடித்த பாம்பு
நெய்வேலி: கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே வீட்டுக்கு வெளியே வைத்திருந்த ஷூவில் இருந்த பாம்பு கடித்ததில் மாணவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
திட்டக்குடி வட்டம், தொழுதூா் வ.உ.சி நகரைச் சோ்ந்த கண்ணன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறாா். இவரது மகன் கௌஷிக் (12), ராமநத்தம் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வருகிறாா்.
கௌஷிக் திங்கள்கிழமை காலை பள்ளிக்குச் செல்ல வீட்டின் வெளியே இருந்த ஷூவை அணிந்தாா். அப்போது, அந்த ஷூவில் இருந்த சிறிய பாம்பு கடித்ததில் காயமடைந்த கௌஷிக், திருச்சியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.