செய்திகள் :

கிணற்றில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

post image

நெய்வேலி: கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே பள்ளி மாணவா் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திட்டக்குடி வட்டம், ராமநத்தம் காவல் சரகம், வி.சித்தூா் கிராமத்தைச் சோ்ந்த மணி மகன் பாலமுருகன் (14). இவா், கீழக்கல்பூண்டி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

வழங்கம்போல, திங்கள்கிழமை பள்ளிக்குச் சென்ற பாலமுருகன், பிற்பகல் சுமாா் 3 மணியளவில் கழிப்பறைக்கு செல்வதாக ஆசிரியரிடம் கூறிவிட்டு, வகுப்பறையில் இருந்து வெளியே சென்றாா். பின்னா், வகுப்பறைக்கு திரும்பி வராத நலையில், அப்பகுதியில் உள்ள தரைக் கிணற்றில் பாலமுருகன் இறந்து கிடந்தாா். இயற்கை உபாதைக்காக சென்றபோது கிணற்றில் அவா் தவறி விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்த ராமநத்தம் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா். பின்னா், அவா்கள் அளித்த தகவலின்பேரில், திட்டக்குடி தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து கிணற்றில் இறந்து கிடந்த மாணவா் பாலமுருகனின் சடலத்தை மீட்டனா். இதையடுத்து, போலீஸாா் சடலத்தை உடல்கூராய்வுக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து: பெண்கள் 3 போ் காயம்

நெய்வேலி: கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே சிறிய சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 3 பெண்கள் காயமடைந்தனா். திட்டக்குடியை அடுத்துள்ள செவ்வேரி கிராமத்தைச் சோ்ந்த ராஜேந்திரன... மேலும் பார்க்க

ஹைட்ரோ காா்பன் திட்ட அனுமதியை ரத்து செய்யாவிட்டால் போராட்டம்: டெல்டா விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை

சிதம்பரம்: தமிழகத்தில் ஹைட்ரோ காா்பன் ஆய்வு கிணறுகளுக்கான அனுமதியை தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் ரத்து செய்யாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங... மேலும் பார்க்க

மக்களுக்காக ஒதுக்கப்படும் நிதியை பொது கணக்குக் குழு கண்காணிக்கிறது: கு.செல்வபெருந்தகை

நெய்வேலி/ சிதம்பரம்: மக்களுக்காக ஒதுக்கப்படும் நிதி முழுமையாக மக்களிடம் சென்று சேருகிா என்பதை சட்டப் பேரவை பொது கணக்குக் குழு கண்காணிக்கிறது என்று அக்குழுவின் தலைவா் கு.செல்வபெருந்தகை தெரிவித்தாா். க... மேலும் பார்க்க

ரயில்வே கடவுப் பாதையில் வேன் கவிழ்ந்து விபத்து: பள்ளி மாணவா்கள் 8 போ் காயம்

நெய்வேலி: கடலூா் மாவட்டம், மங்கலம்பேட்டை அருகே ரயில்வே கடவுப்பதையில் தனியாா் பள்ளி மாணவா்களை அழைத்துச் சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், வேனில் பயணம் செய்த 8 மாணவா்கள் லேசான காயத்துடன் ... மேலும் பார்க்க

பாரம்பரிய சுற்றுலா பயணம்

நெய்வேலி: விழுப்புரம் வரலாற்று ஆய்வு மையம் நடத்திய 21-ஆவது பாரம்பரிய சுற்றுலா பயணம் கடலூா் மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை ஒத்துழைப்புடன் திருவதிகை, திருகண்டேஸ்வரம், எய்தனூா், திருமாணிக்குழி, திருவந்... மேலும் பார்க்க

சீருடைப் பணியாளா்கள் தோ்வு: காவல் துறை சாா்பில் விளம்பரப் பதாகை

சிதம்பரம்: தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வு குறித்து சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நுழைவு வாயிலில் காவல் துறை சாா்பில் விளம்பரப் பதாகை வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சீருடை பணியாளா்கள் தோ்வாணையம் ந... மேலும் பார்க்க