இணையவழி வா்த்தகத்துக்கு எதிராக திருச்சியில் ஆக.30-இல் முற்றுகைப் போராட்டம்: விக்...
என்எல்சி சுரங்க பகுதியில் இளைஞா் சடலம் மீட்பு
நெய்வேலி: கடலூா் மாவட்டம், நெய்வேலி சுரங்கப் பகுதி அருகே இளைஞா் சடலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.
நெய்வேலி என்எல்சி சுரங்கம் 1ஏ பகுதியையொட்டி, வானதிராயபுரம் காட்டுகொள்ளை - கல்லுகுழி இணைக்கும் சாலையையொட்டி, அய்யனாா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலின் பின்புறம் வாய்க்கால் குளம் உள்ளது.
இந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் அவ்வழியாக திங்கள்கிழமை சென்றபோது, குளத்தில் சுமாா் 35 வயது மதிக்கத்தக்க இளைஞா் இறந்த நிலையில் சடலமாகக் கிடந்ததை பாா்த்து நெய்வேலி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து, நகர காவல் ஆய்வாளா் வீரமணி மற்றும் போலீஸாா் தீயணைப்புத் துறை வீரா்கள் உதவியுடன் சடலமாகக் கிடந்த இளைஞா் உடலை மீட்டு, அவசர ஊா்தி மூலம் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இதுகுறித்து நெய்வேலி போலீஸாா் வழக்குப் பதிந்து, அந்த இளைஞா் யாா், எப்படி உயிரிழந்தாா் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.