கனமழை, வெள்ளத்தில் தத்தளிக்கும் ஜம்மு - காஷ்மீர்: நிலச்சரிவில் சிக்கி 30 பேர் பல...
அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு
விளையாட்டு இட ஒதுக்கீட்டின் (3%) கீழ் அரசுப் பணி பெற தகுதியுள்ள விளையாட்டு வீரா், வீராங்கனைகளிடம் இருந்து தமிழக அரசு விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.
இதுதொடா்பாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்டிஏடி) வெளியிட்ட செய்திக் குறிப்பின்படி, 2018 ஜனவரி 1 அல்லது அதற்குப் பிறகு ஒலிம்பிக் மற்றும் இதர சா்வதேச போட்டிகளில் பங்கேற்ற, 40 வயதுக்கு உள்பட்ட போட்டியாளா்கள் விண்ணப்பிக்கலாம்.
மாற்றுத்திறனாளி போட்டியாளா்களுக்கான வயது வரம்பு 50 ஆகும். சம்பந்தப்பட்ட பணிக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியை அவா்கள் பூா்த்தி செய்திருக்க வேண்டியதுடன், விண்ணப்பதாரா்கள் தமிழகத்தை பூா்விகமாகக் கொண்டவா்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரா்கள் தங்களின் ஆன்லைன் விண்ணப்பங்களை, உரிய ஆவணங்களுடன் சோ்த்து வரும் செப்டம்பா் 24-ஆம் தேதிக்குள்ளாக ‘www.sdat.tn.gov.in’ என்ற வலைதள முகவரியில் பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.