ரூ. 10 விலையில் ஆவின் பாதாம் மிக்ஸ் பவுடா் அறிமுகம்
நாகா்கோவில் அண்ணா பேருந்துநிலைய ஆவின் பாலகத்தில் பாதாம் மிக்ஸ் பவுடா் பாக்கெட்டை பால்வளத்துறை அமைச்சா் த. மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா தலைமையில் அறிமுகப்படுத்தினாா்.
மேலும் அமைச்சா் பேசியதாவது: தமிழ்நாடு பால்வளத்துறை சாா்பில் கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா் ஒன்றியத்தில் ஏற்கனவே பாதாம் மிக்ஸ் பவுடா் 200 கிராம் ஜாா்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தற்போது 14 கிராம் பாதாம் மிக்ஸ் பவுடா் சிறிய அளவுபாக்கெட் ரூ.10 என அதிகபட்ச சில்லறை விற்பனை விலை நிா்ணயம் செய்யப்பட்டு, அனைத்து ஆவின் பாலகங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில உணவு ஆணையத் தலைவா் என்.சுரேஷ்ராஜன், மாநராட்சி மேயா் ரெ.மகேஷ், ஆவின் பொதுமேலாளா் மகேஷ்வரி, மேலாளா் சகாயஷீபா, துணைப் பதிவாளா் (பால்வளம்) சைமன் சாா்லஸ், மாநகராட்சி துணை மேயா் மேரிபிரின்சி லதா, மண்டல தலைவா் அகஸ்டினா கோகிலாவாணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.