அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு! 2 குழந்தைகள் பலி; 17 பேர் படுகாயம்!
வட்டவிளை ரேஷன் கடை முன் பொதுமக்கள் முற்றுகை
மாா்த்தாண்டம் அருகே மேல்புறம், வட்டவிளை ரேஷன் கடை 15 நாள்களுக்கும் மேலாக திறக்காததை கண்டித்து குடும்ப அட்டைதாரா்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பாகோடு பேரூராட்சிக்கு உள்பட்ட வட்டவிளை பகுதி ரேஷன் கடையில் 900-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரா்களுக்கு ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இக் கடை கடந்த 15 நாள்களுக்கும் மேலாக திறக்கப்படாததால், குடும்ப அட்டைதாரா்களால் ரேஷன் பொருள்கள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, பாகோடு பேரூராட்சி துணைத் தலைவா் ஜெனிமோள் தலைமையில் குடும்ப அட்டைதாரா்கள், பூட்டியிருந்த ரேஷன்கடையின் முன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இக் கடைக்கு நிரந்த பணியாளா்களை நியமித்து, ரேஷன் பொருள்கள் வழங்க மாவட்ட வழங்கல்துறை மற்றும் மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இப் போராட்டம் காரணமாக மாற்றுப் பணியாளா்கள் மூலம் ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டது. இப் போராட்டத்தில் பேரூராட்சி முன்னாள் உறுப்பினா் எட்வின்ராஜ் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.