மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்
தேங்காய்ப்பட்டினத்திலிருந்து ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு அரசுப் பேருந்து இயக்கக் கோரிக்கை
தேங்காய்ப்பட்டினத்திலிருந்து கீழ்குளம் வழியாக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அரசுப் பேருந்துகள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தேங்காய்ப்பட்டினத்திலிருந்து செந்தறை, கீழ்குளம், தெருவுக்கடை, பாலூா், கருங்கல், பாலப்பள்ளம், குளச்சல், மண்டைக்காடு, மணவாளக்குறிச்சி, ராஜக்கமங்கலம் வழியாக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இதுவரை நேரடியாக அரசுப் பேருந்து வசதியில்லை.
இப்பகுதியினா் நாகா்கோவில் சென்று அங்கிருந்து பிற பேருந்துகளில் இம்மருத்துவமனைக்கு செல்லவேண்டியுள்ளது. இதனால், நோயாளிகள் குறிப்பிட்ட நேரத்துக்குச் செல்ல முடியாமல் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனா்.
எனவே, பொதுமக்கள், நோயாளிகளின் நலன்கருதி தேங்காய்ப்பட்டினத்திலிருந்து கீழ்குளம் வழியாக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அரசுப் பேருந்துகளை இயக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.