மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்
இரவிபுத்தன்துறை பகுதியில் நாளை மின்நிறுத்தம்
பராமரிப்புப் பணிகள் காரணமாக, குழித்துறை மின்கோட்டத்துக்கு உள்பட்ட இரவிபுத்தன்துறை உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஆக. 28) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இரவிபுத்தன்துறை, ததேயுபுரம், ஆப்பிக்கோடு, விழுந்தயம்பலம், பிலாங்காலை, தெருவுக்கடை, ஊற்றுமுகம் பகுதிகளில் காலை 9 முதல் பிற்பகல் 3 மணிவரை மின்விநியோகம் இருக்காது.
இதேபோல, மாங்குழி, அடைக்காகுழி, முருங்கவிளை, கருக்கி, பரக்காணி, கணபதியான்கடவு, புல்லாணி, பரியாக்கரை பகுதிகளில் 29ஆம் தேதியும், மணக்காலை, புதுக்கோடு, பாறக்கடை, கோடியூா், கிராத்தூா், மடத்துவிளாகம், கலிங்கராஜபுரம், நீா்ச்சுழி, மருதூா்குறிச்சி, பாலவிளை, மங்கலக்குன்று, தும்பாலி, சானல்முக்கு, தட்டான்விளை பகுதிகளில் 30ஆம் தேதியும் மின்விநியோகம் இருக்காது என, குழித்துறை மின்விநியோக செயற்பொறியாளா் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.