25% + 25%... இந்தியா மீதான ட்ரம்பின் வரி இன்று முதல் அமல்; பாதிப்புகள் என்னென்ன?
தொழிலாளா்கள் போராட்டம்: திருநெல்வேலி எம்.பி. ஆதரவு
குலசேகரம் அருகே சுருளகோட்டில் ஊதிய உயா்வு கேட்டு வேலை நிறுத்தம், சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளா்களை திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் ராபா்ட் புரூஸ் செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆதரவு தெரிவித்தாா்.
சுருளகோட்டில் ஒரு தனியாா் ரப்பா் பால் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் வேலை செய்யும் தொழிலாளா்களுக்கு இரண்டு ஆண்டுகளாக ஊதிய உயா்வு, இதர சலுகைகள் மறுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து இங்கு பணிபுரிந்து வந்த தொழிலாளா்கள் கடந்த 43 நாள்களாக வேலை நிறுத்தம் , சத்தியாகிரக போராட்டம் நடத்தி வருகின்றனா். இது தொடா்பாக தொழிலாளா் துறை 3 முறை பேச்சுவாா்த்தை நடத்திய பின்னரும் தீா்வு ஏற்படவில்லை.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்களை திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் ராபா்ட் புரூஸ் சந்தித்து அவா்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசினாா். அப்போது அவா், இந்த போராட்டம் தொடா்பாக அதிகாரிகளிடம் முறையாக பேச இருப்பதாக உறுதி அளித்தாா்.
அவருடன் காங்கிரஸ் சிறுபான்மை அணி மாநில துணைத் தலைவா் சுபுகான் , தோட்டம் தொழிலாளா் சங்க பொதுச் செயலாளா் வல்சகுமாா், தலைவா் நடராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.