செய்திகள் :

தனி விமானம் மூலம் பிகார் புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

post image

சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் பிகார் புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்தத்துக்கு எதிா்ப்பு தெரிவித்தும், வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றும் நோக்கிலும் எதிா்க்கட்சிகள் சாா்பிலான வாக்குரிமை பயணத்தை பிகாரில் ஞாயிற்றுக்கிழமை(ஆக.17) தொடங்கினாா் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி.

இந்தப் பயணம் செப்டம்பா் 1-ஆம் தேதி பாட்னாவின் காந்தி மைதானத்தில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்துடன் நிறைவடைய உள்ளது.

நடைப்பயணமாகவும், வாகனப் பயணமாகவும் 16 நாள்கள் 1,300 கி.மீ. தொலைவைக் கடந்து 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதனிடையே, வாக்குரிமை பயணத்தை ஓர் இடைவேளைக்குப் பின் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை மீண்டும் தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில், 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, காங்கிரஸ் உடனான திமுகவின் நெருக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையிலும் காங்கிரஸ் தலைமையிலான பேரணிக்கு திமுக ஆதரவை தெரிவிக்கும் வகையிலும் பிகாரில் ராகுல் காந்தி நடத்தி வரும் வாக்குரிமை பயணத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின், தூத்துக்குடி திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோர் தனி விமானத்தில் புதன்கிழமை காலை 7.30 மணிக்கு பிகார் புறப்பட்டு சென்றனர்.

தரபங்கா விமான நிலையத்தில் இருந்து சாலைமார்க்கமாக சென்று ராகுல்காந்தி வாக்குரிமை பயணத்தில் பங்கேற்க உள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

பின்னர், பேரணி நிறைவடையும் இடத்தில் மாபெரும் பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசுகிறார். அதன்பின்னர் அங்கிருந்து பிற்பகல் 2 மணியளவில் தர்பங்கா விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து தனி விமானம் மூலம் மாலை 4.30 மணியளவில் சென்னை திரும்புகிறார்.

டியூஷன் செல்லும் மூன்றில் ஒரு பங்கு பள்ளி மாணவா்கள்: மத்திய அரசின் ஆய்வில் தகவல்

Chief Minister MK Stalin will join Congress leader Rahul Gandhi's ‘Voter Adhikar Yatra’ in Bihar today Wednesday

15 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட ஏலேல சிங்க விநாயகர்!

காஞ்சிபுரம்: விநாயகர் சதுர்த்தி திருநாளையொட்டி, காஞ்சிபுரம் காமட்சி அம்மன் கோயில் சந்நிதி தெருவில் அமைந்துள்ள ஏலேல சிங்க விநாயகர் புதன்கிழமை ரூ.15 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி: விநாயகர் கோயில்களில் திரளமான பக்தர்கள் தரிசனம்

சென்னை: விநாயகர் சதுர்த்தியாயொட்டி, தமிழகம் முழுவதும் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் கோயில்களில் புதன்கிழமை காலை முதல் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றன. தமிழகம்... மேலும் பார்க்க

நெல்லை கவின் ஆணவக் கொலை: மேலும் 15 நாள்கள் காவல் நீட்டிப்பு!

நெல்லை கவின் ஆணவக் கொலை வழக்கில் சுர்ஜித் உள்பட மூவருக்கு மேலும் 15 நாள்கள் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டத்தையே உலுக்கிய ஐ.டி. ஊழியர் கவின் ஆணவப் படுகொலை வழக்கில் கைதான சுர்ஜித்,... மேலும் பார்க்க

புதுச்சேரி உள்பட 5 இடங்களில் அபுல் கலாம் ஆசாத் ஆசியன் ஆராய்ச்சி மையம்!

நாட்டில் புதுச்சேரி உள்ளிட்ட 5 இடங்களில் மெளலானா அபுல் கலாம் ஆசாத் ஆசியன் ஆராய்ச்சி மையம் அமைய உள்ளது.இப்போது மத்திய அரசின் கலாசாரத் துறையின் கீழ் இந்த மையம் மேற்கு வங்கத்தில் செயல்பட்டு வருகிறது. இதே... மேலும் பார்க்க

நல்லகண்ணு உடல் நிலையில் நல்ல முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் ஆா். நல்லகண்ணு உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாளில் பூரண நலம் பெற்று வீடு திரும்புவார் என சென்னை நந்தனம் வெங்கடேஸ்வரா மருத்துவமன... மேலும் பார்க்க

சுதர்சன் ரெட்டிக்கு வாக்களிக்க வேண்டும்: தொல்.திருமாவளவன்

சென்னை: இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கக் கூடிய வலிமை உள்ள சுதர்சன் ரெட்டிக்கு வாக்களிக்க வேண்டும் என விசிக தலைவர் தொல்.திருமாவளன் தெரிவித்தார். குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் இந்தியா கூட்டண... மேலும் பார்க்க