செய்திகள் :

சென்னையில் இருந்து செல்லக்கூடிய 6 டூரிஸ்ட் ஸ்பாட்'ஸ் - பட்ஜெட் Trip செல்ல ரெடியா?

post image

மூன்று நாள் தொடர் விடுமுறை; இதில் செலவுகள் அதிகம் இன்றி சென்னையில் இருந்து சுற்றுலா செல்ல விரும்புவோருக்கான பதிவுதான் இது. அடுத்தடுத்து விடுமுறைகள் வருவதால் சுற்றுலா செல்ல திட்டமிட்டுக்கொண்டிருப்பார்கள். அந்த வகையில் குறைந்த செலவில் ஒரு நாள் சுற்றுலா சென்று வருவதற்கு ஏற்ற இடங்கள் சிலவற்றை பற்றி இங்கு நாம் காணலாம்.

புதுச்சேரி

பிரஞ்சு கலாசாரத்தின் அடையாளங்களை தாங்கி நிற்கும் புதுச்சேரி, குறைவான செலவில் சுற்றுலா செல்ல ஏற்ற இடம் ஆகும். கடற்கரை, கடைவீதிகள் என்று பல விஷயங்கள் உள்ளன.

ஏற்காடு

சேலத்திற்கு மிக அருகில் அமைந்துள்ள ஏற்காடு கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஒரு பிரபலமான மலைவாசஸ்தலம். இங்கு சென்று வர ரூபாய் 2000 இருந்தால் கூட போதுமானது.

ஏற்காடு

தேக்கடி

தமிழ்நாடு - கேரள எல்லையில் அமைந்துள்ளது தேக்கடி. மிகவும் பிரபலமான பெரியார் தேசிய பூங்கா, அங்கு இருக்கும் யானைகள், புலிகள், மான்கள் மற்றும் காட்டெருமைகள் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் அம்சங்களாக உள்ளது.

வர்க்கலா

குட்டி கோவா என அழைக்கப்படும் வர்க்கலா கடற்கரை கேரள மாநிலத்தில் அமைந்துள்ளது. சென்னை டு வர்க்கலா ரயிலில் 15 மணிநேரம் பயணிக்க வேண்டும். டிக்கெட் விலையும் குறைவுதான்.

ராமேஸ்வரம் கோயில்

ராமேஸ்வரம்

இந்தியாவின் புனித யாத்திரை தலங்களில் ஒன்றான ராமேஸ்வரம், தென் தமிழகத்தின் எல்லையில் அமைந்துள்ளது. குறைந்த செலவில் ஆன்மிக பயணம் மேற்கொள்ள விரும்புவோர் இங்கு சென்று வரலாம்.

சிதம்பரம்

சென்னையில் இருந்து 335 கிமீ தொலைவில் அமைந்துள்ள சிதம்பரம், பல்வேறு கலாச்சாரங்களின் கலவையாக உள்ளது. சிம்பரம் வழி செல்லும் தினசரி ரயில்கள் உங்கள் பட்ஜெட் பயணத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும். இந்த விடுமுறை நாட்களை கழிக்க பட்ஜெட்டுடன் சுற்றுலா செல்ல நீங்கள் தயாரா?

"செலவை விட அனுபவமே முக்கியம்" – குறைந்த செலவில் ஐரோப்பாவைச் சுற்றிய இந்தியப் பெண்; எப்படி தெரியுமா?

பொதுவாக ஐரோப்பா பயணம் என்றாலே அதிக செலவான, எளிதில் செல்ல முடியாத பயணமாக இருக்கும். ஆனால், இந்தியாவைச் சேர்ந்த கனக் அகர்வால் என்ற ஐஐடி பட்டதாரி, ஒரு ஐபோனின் விலையை விட குறைவான செலவில் நான்கு ஐரோப்பிய ந... மேலும் பார்க்க

கைவிடப்பட்ட தீவை ஆடம்பர டூரிஸ்ட் ஸ்பாட்டாக மாற்றிய சாஃப்ட்வேர் இன்ஜினீயர் - எப்படி தெரியுமா?

ஒருகாலத்தில் வெறிச்சோடி காணப்பட்ட, நெப்போலியன் கால கோட்டையால் மட்டுமே அறியப்பட்ட தோர்ன் தீவு (Thorne Island), இன்று தனியார் ஆடம்பர கொண்டாட்டத் தலமாக மாறியுள்ளது. முன்னாள் சாப்ட்வேர் இன்ஜினீயர் மைக் கா... மேலும் பார்க்க

Nude Cruise Trend: பிரபலமாகும் அடையில்லா கப்பல் பயணம்; ஆர்வம் காட்டும் பயணிகள்; என்ன காரணம்?

அமெரிக்காவைச் சேர்ந்த ’பேர் நெசசிட்டீஸ்’ (Bare Necessities) என்ற நிறுவனம், பயணிகள் உடை அணியாமல் (Nude Cruise) செல்லும், கப்பல் பயணங்களை ஏற்பாடு செய்து வருகிறது.இந்தப் பயணங்களின் நோக்கம், பயணிகள் தங்கள... மேலும் பார்க்க

பயணத்தின் நடுவில் ஒரு திடீர் முடிவு - பிரிதலின் வலியை உணர்த்திய லடாக் |திசையெல்லாம் பனி - 11

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

தேனி: குடும்பத்துடன் விடுமுறை நாட்களை கழிக்க சூப்பர் மலை வாசஸ்தலம் - போடிமெட்டு செல்ல தயாரா?

தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள போடிமெட்டு, ஏலக்காய் விளைவிக்கப்படுவதற்கு பெயர் பெற்ற ஒரு முக்கியமான இடமாகத் திகழ்கிறது. பூப்பாறையிலிருந்து 10 கி.மீ தொலைவில், தேசிய நெடுஞ்சாலை 85-ஐ ஒட்டி, போடிநாயக்கனூரை ... மேலும் பார்க்க

Train Ticket: நாளை முதல் தீபாவளி ரயில் டிக்கெட் புக்கிங் தொடக்கம் மக்களே.!

தீபாவளி வந்துடுச்சு. என்ன அதுக்குள்ளேயுமா? என்று ஷாக் ஆகிவிடாதீர்கள். நாளை முதல் தீபாவளி ரயில் டிக்கெட் புக்கிங் தொடங்கப்போகிறது. இந்த ஆண்டு தீபாவளி அக்டோபர் 20-ம் தேதி வர உள்ளது. அதுவும் திங்கட்கிழமை... மேலும் பார்க்க