தவெக மாநாட்டில் சிறப்பான ஏற்பாடுகள்; ஜன. 9 வரை காத்திருங்கள்: பிரேமலதா
விஷாலின் மகுடம் போஸ்டர்!
நடிகர் விஷால் நடிக்கும் மகுடம் திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.
ஈட்டி பட இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில் நடிகர் விஷால் தனது 35-ஆவது படத்தில் நடித்து வருகிறார்.
சூப்பர் குட் பிலிம்ஸின் 99-வது படமாக உருவாகும் இதில் நடிகை துஷாரா விஜயன் நாயகியாகவும் அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்க, ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.
அதிரடி ஆக்சன் திரைப்படமாக உருவாகவுள்ள இப்படத்திற்கு ‘மகுடம்’ எனப் பெயரிட்டுள்ளனர். கடல் மற்றும் துறைமுகம் சார்ந்த கதையாக இப்படம் இருக்கும் எனத் தெரிகிறது.

இந்த நிலையில், மகுடம் திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளனர். இதில், மூன்று தோற்றங்களில் விஷால் உள்ளதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க: தீயான வியப்பு காத்திருக்கிறது... ஹரிஷ் கல்யாண் பகிர்ந்த டீசல் பட அப்டேட்!