"இந்து பையனுக்கும், இஸ்லாமிய பெண்ணுக்கும் காதல் திருமணம் செய்து வைப்பார்களா?" - ...
31 ஆண்டுகளுக்குப் பிறகு... ஆசிய கோப்பைக்குத் தேர்வான கஜகஸ்தான்!
கஜகஸ்தான் அணி ஆசிய கோப்பை ஹாக்கி போட்டிக்குத் தேர்வாகியுள்ளது.
1994-ஆம் ஆண்டுக்குப் பிறகு கஜகஸ்தான் தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வரும் ஆக.29 முதல் தொடங்கும் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டிகளில் விளையாட கஜகஸ்தான் தேர்வாகியுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இந்தியாவுக்கு (பிகார்) முதல்முறையாக வந்தடைந்தனர்.
ஹிரோஷிமாவில் 1994-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பையில் கஜகஸ்தான் ஐந்தாம் இடம் பிடித்தது. அதே ஆண்டு ஆசிய போட்டிகளில் 6ஆவது இடம் பிடித்து அசத்தியது.
தற்போதைக்கு, உலக ஹாக்கி தரவரிசைப் பட்டியலில் கஜகஸ்தான் 81-ஆவது இடத்தில் இருக்கிறது.
குரூப் ஏ பிரிவில் இந்தியா, கஜகஸ்தான், ஜப்பான், சீனா ஆகிய அணிகள் உள்ளன.
ஆக.29ஆம் தேதி கஜகஸ்தான் தனது முதல் போட்டியில் ஜப்பானையும் அடுத்ததாக ஆக.31-இல் சீனாவையும் எதிர்கொள்கிறது.
இந்தியாவுடன் செப்.1ஆம் தேதியும் மோதவிருக்கிறது. இந்த அணியின் கேப்டன் யெர்கெபுலான் டியுசெபெகோவ் கூறியதாவது:
ஹாக்கியின் இதயமாக இருக்கும் இந்தியாவுக்கு முதல்முறையாக வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது ஒரு சிறப்பான வாய்ப்பாக கருதுகிறோம்
எங்களது அணி மிகவும் இளமையானது. கற்றுக்கொண்ட வளரவேண்டுமென ஆர்வமாக இருக்கிறோம்.
கஜகஸ்தானைப் பெருமைப்பட வைக்க கடினமாக போராடுவோம் என்றார்.