வாக்குத் திருட்டு: “மோடிக்கு தேர்தல் ஆணையம் உதவுகிறதா?” -ராகுல் சுமத்தும் குற்றச...
பஞ்சாப் வெள்ளத்தில் சிக்கித் தவித்த 22 சிஆர்பிஎப் வீரர்களை மீட்டது இந்திய ராணுவம்!
மாதோபூர் (பஞ்சாப்): பஞ்சாபின் பதான்கோட் மாவட்டத்தில் உள்ள மாதோபூர் தலைமையகம் அருகே மழைவெள்ளத்தில் சிக்கித் தவித்த 22 சிஆர்பிஎப் வீரர்கள், பொதுமக்கள் 3 பேரை புதன்கிழமை காலை 6 மணிக்கு இந்திய ராணுவ விமானப் படை மீட்ட அடுத்த சில நிமிடங்களில் சிஆர்பிஎப் வீரர்களின் முகாம் அலுவலக கட்டடம் இடிந்து விழுந்துள்ளது.
புதன்கிழமை காலை 6 மணிக்கு மோசமான வானிலை நிலவியபோதிலும் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்புப் பணிகளில் ஈடுபட்ட இந்திய ராணுவ விமானப்படை, மாதோபூரில் உள்ள பழைய அடுக்குமாடி கட்டடத்தின் மேல் ஹெலிகாப்டரை சாதுர்யமாக இறக்கி வெள்ளத்தில் சிக்கித் தவித்த அனைவரையும் வெற்றிகரமாக மீட்டு, பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு வந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வெள்ளத்தில் சிக்கியிருந்தவர்களை விமானப்படை வீரர்கள் மீட்ட அடுத்த சில நிமிடங்களில் அந்த கட்டடம் இடிந்து விழுந்து தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது.
இந்த சம்பவத்தில் விமானப்படையினர் துணிச்சலாக சரியான நேரத்தில் பல உயிர்களை காப்பறிய விமானப்படை வீரர்களின் செயல்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
நெருக்கடி சூழ்நிலைகளில் தங்களது மிக சாதுர்யமான வெற்றிகரமான நடவடிக்கைகளால் உயிர்களைப் பாதுகாப்பதில் இந்திய ராணுவத்தின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பும், திறனும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இது இந்திய ராணுவத்திற்கும் உள்ளூர் அதிகாரிகளுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பை மீட்பு நடவடிக்கையும், அவசரநிலைகளுக்கு விரைவான மற்றும் திறமையான நடவடிக்கைக்கான முன்னுதாரனத்தை உறுதி செய்துள்ளது.
ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் பெய்த கனமழையால் சட்லஜ், பியாஸ், உஜ் மற்றும் ரவி போன்ற ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது, இதனால் பஞ்சாப் மாவட்டங்களான பதான்கோட், ஹோஷியார்பூர், குர்தாஸ்பூர், கபுர்தலா, ஃபாசில்கா, டார்ன் தரன் மற்றும் ஃபிரோஸ்பூர் உள்ளிட்ட இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
நீர் மட்டங்கள் தொடர்பாக ஜம்மு காஷ்மீரின் அதிகாரிகளுடன் மாவட்ட அதிகாரிகள் ஒருங்கிணைந்து வருவதாக அவர் மேலும் கூறினார்.
ஜம்மு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்யும் அபாயம் உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை காலை எச்சரிக்கை விடுத்தது.
இந்திய வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி, ஜம்மு, ஆர்எஸ் புரா, சம்பா, அக்னூர், நக்ரோட்டா, கோட் பல்வால், பிஷ்னா, விஜய்பூர், பர்மண்டல் மற்றும் கதுவா மற்றும் உதம்பூரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது, மேலும் ஆலங்கட்டி மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மிதமான வெப்பச்சலனம் காரணமாக ரியாசி, ராம்பன், தோடா, பில்லாவர், கத்ரா, ராம்நகர், ஹிராநகர், கூல், பனிஹால் மற்றும் சம்பா மற்றும் கதுவா மாவட்டங்களின் அருகிலுள்ள பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.