சிரியா தலைநகரில்... இஸ்ரேலின் ட்ரோன் தாக்குதலில் 6 வீரர்கள் பலி!
வாக்குத் திருட்டு: “மோடிக்கு தேர்தல் ஆணையம் உதவுகிறதா?” -ராகுல் சுமத்தும் குற்றச்சாட்டு!
பாஜக மீது வாக்குத் திருட்டு குற்றச்சாட்டை சுமத்தியுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு தேர்தல் ஆணையம் உதவுகிறதா? என்ற கோணத்திலும் குற்றச்சாட்டை சுமத்தியிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பிகார் மாநிலம் முஸாஃபர்பூரில் இன்று(ஆக. 27) நடைபெற்ற ‘வாக்குரிமைப் பேரணியில்’ பேசிய ராகுல் காந்தி: “2023-இல் வாக்குத் திருட்டு விவகாரத்தைக் குறித்து புரிந்து கொண்டதும், அதற்கான ஆதாரம் கிடைக்கப் பெற்றதும், மக்களவையிலும் மாநிலங்களவையிலும் ஒரு புதுச்சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, என்ன நடந்தாலும் சரி, தேர்தல் ஆணையர் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாது என்பதே.
தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டுமாயின், இந்தச் சட்டத்துக்கான அவசியம் ஏன் எழுகிறது?
காரணம் ஒன்றே ஒன்றுதான், இவர்கள்(தேர்தல் ஆணையம்) வாக்குத் திருட்டில் பிரதமர் நரேந்திர மோடிக்கு உதவுகிறார்கள்.
வாக்குத் திருட்டு என்பது பிற்படுத்தப்பட்ட பிரிவினர், தலித், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர், சிறுபான்மையினர் மற்றும் இந்தியாவின் ஏழை பொதுப்பிரிவு மக்கள் மீதான தாக்குதலே.
வாக்கு இழக்கப்பட்ட பின், அடுத்ததாக ரேஷன் அட்டையையும் நிலத்தையும் இழக்க நேரிடும்.
நீங்கள், அதாவது உங்களை அவமதிக்கும்போது, உங்களுக்கான வாய்ப்புகள் வழங்கப்படாதபோது, உங்களுக்கு கல்வி வழங்கப்படாதபோது, இந்தியாவில் மீண்டும் சுதந்திரம் அடைவதற்கு முந்தைய காலக்கட்டம் திரும்ப வரக்கூடும்!!” என்றார்.