செய்திகள் :

ஜம்மு - காஷ்மீரில் ஒரே நாளில் 380 மி.மீ. மழை! நூறு ஆண்டுகளில் அதிகபட்சம்!

post image

ஜம்மு - காஷ்மீரில் கடந்த 24 மணிநேரத்தில் 380 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

1910 ஆம் ஆண்டு முதல் 24 மணிநேரத்தில் பதிவான அதிகபட்சம் மழை இதுவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீரில் ஆகஸ்ட் மாதத்தின் சராசரி மழை அளவு 403 மி.மீ. மட்டுமே.

ஜம்மு - காஷ்மீரில் திடீரென பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மீட்புப் பணிகளில் இந்திய ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். அண்டை மாநிலமான பஞ்சாபிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து, நான்காம் நாளாக மழை பெய்து வரும் நிலையில், தாழ்வான பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். தோடா மாவட்டம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், திரிகூட மலையின் உச்சியில் உள்ள புனிதத் தலமான வைஷ்ணவ தேவி கோயிலுக்குச் செல்லும் பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலர் சிக்கியுள்ளனர். இதுவரை 32 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

20 -க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், புனித யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஜம்மு - காஷ்மீரில் அபாய அளவைக் கடந்து ஓடும் ஆறுகள், நிலச்சரிவுகள், அடித்துச் செல்லப்பட்ட சாலைகள், இடிந்து விழும் கட்டடங்கள் என சமூக ஊடகங்களில் பல்வேறு காட்சிகள் பரவி வருகின்றன.

The India Meteorological Department said on Wednesday that Jammu and Kashmir has received 380 mm of rainfall in the last 24 hours.

இதையும் படிக்க : கனமழை, வெள்ளத்தில் தத்தளிக்கும் ஜம்மு - காஷ்மீர்: நிலச்சரிவில் சிக்கி 30 பேர் பலி!

வாக்குகளைத் திருடியே வெற்றி பெறுகிறார் மோடி; ஆதாரத்துடன் வெளிக்காட்டுவோம்! -ராகுல் சவால்

பாஜக மீது வாக்குத் திருட்டு குற்றச்சாட்டை சுமத்தியுள்ள ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு தேர்தல் ஆணையம் உதவுகிறதா? என்ற கோணத்திலும் குற்றச்சாட்டை சுமத்தியிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம் - சத்தீஸ்கர் எல்லையில்.. 4 நக்சல்கள் சுட்டுக்கொலை!

மகாராஷ்டிரம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களின் எல்லையில், 4 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். சத்தீஸ்கரின் நாரயணப்பூர் மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ள, மகாராஷ்டிராவின்... மேலும் பார்க்க

வாக்குத் திருட்டு: “மோடிக்கு தேர்தல் ஆணையம் உதவுகிறதா?” -ராகுல் சுமத்தும் குற்றச்சாட்டு!

பாஜக மீது வாக்குத் திருட்டு குற்றச்சாட்டை சுமத்தியுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு தேர்தல் ஆணையம் உதவுகிறதா? என்ற கோணத்திலும் குற்றச்சாட்டை சுமத்தியிருப்பது... மேலும் பார்க்க

குஜராத்தில் முகவரி இல்லாத கட்சிகளுக்கு ரூ. 4,300 கோடி நன்கொடை! ராகுல் கேள்வி

குஜராத்தில் யாரும் அறியாத பெயர்கள் கொண்ட கட்சிகளுக்கு ரூ. 4,300 கோடி நன்கொடை கிடைத்திருப்பது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் விசாரிக்குமா என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்ப... மேலும் பார்க்க

பிகார்: ராகுல் பேரணியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு!

பிகாரில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நடத்தும் வாக்குரிமை பேரணியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டுள்ளார். பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்தத்துக்கு எதிா்ப்பு தெரிவித்தும், வாக்... மேலும் பார்க்க

நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு! ஐடி ஊழியரை தாக்கிய விவகாரம்!

கேரளத்தில் ஐடி ஊழியரை கடத்தி தாக்கிய விவகாரத்தில் நடிகை லட்சுமி மேனன் தலைமறைவாக இருப்பதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் பார்க்க