ஆஸ்கர் செல்லும் 'Papa Buka' படம்; "இதில் எனக்கும் ஒரு வாய்ப்புக் கிடைத்ததில் பெர...
புற்றுநோய்: 6-ஆவது அறுவைச் சிகிச்சை செய்த மைக்கேல் கிளார்க்!
ஆஸி. முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தனக்கு ஆறாவது முறையாக புற்று நோய்க்கான அறுவைச் சிகிச்சை செய்ததாக பதிவிட்டுள்ளார்.
இந்தப் பதிவு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினாலும் விழிப்புணர்வு வேண்டியே பதிவிட்டுள்ளதாகப் பாராட்டும் கிடைத்து வருகிறது.
ஒருநாள் உலகக் கோப்பை 2015 ஆம் ஆண்டு வென்ற ஆஸி. கேப்டனாக இருந்தவர் மைக்கேல் கிளார்க். அதே ஆண்டு ஆஷஸ் தொடருக்குப் பிறகு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
44 வயதாகும் கிளார்க்கிற்கு முதல்முறையாக 2006-இல் முதல்முறையாக அவருக்குப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.
பின்னர், 2019இல் நெற்றியிலும் 2023-இல் மார்புப் பகுதியிலும் இருந்த புற்றுநோய் செல்களை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றினார்.
இந்நிலையில், தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:
தோல் புற்றுநோய் என்பது கொடுமையானது. குறிப்பாக, ஆஸ்திரேலியாவில் அதிகமாக இருக்கிறது. இன்று எனது மூக்கின் மீதிருந்து ஒன்றை அறுவைச் சிகிச்சை மூலம் எடுத்தோம்.
உங்களது தோல்களை அடிக்கடி பரிசோதித்துக் கொள்ளுங்கள் என கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
வருமுன் காப்பதே சிறந்தது. ஆனால், என்னுடையதில் தொடர்ச்சியான பரிசோதனைகளும் தொடக்கத்திலேயே கண்டறிந்ததும்தான் முக்கியமானது என்றார்.
ஏற்கெனவே, க்ளென் மெக்ராத் ஆஸ்திரேலியாவில் புற்றுநோய்க்கான மருத்துவமனையை உருவாக்கியுள்ளார்.