Ravi Mohan: "என்னை மென்மையான அன்பாலும் கருணையாலும் ஆசீர்வதித்த மூன்று பெண்கள்!" ...
மறுவெளியீடாகும் ரன்!
நடிகர் மாதவனின் ரன் திரைப்படம் மறுவெளியீடாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர்கள் மாதவன், மீரா ஜாஸ்மின் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ரன்.
காதல் - ஆக்சன் திரைப்படமாக உருவான இப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது. முக்கியமாக, படத்தின் சண்டைக் காட்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இப்படம் வெளியாகி 23 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ள நிலையில், இதனை மறுவெளியீடு செய்யவுள்ளதாக இயக்குநர் லிங்குசாமி தெரிவித்துள்ளார்.
ரன் வருகிற செப். 5 ஆம் தேதி மறுவெளியீடாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: ஹரிஷ் கல்யாணின் டீசல் டீசர்!