Ravi Mohan: "என்னை மென்மையான அன்பாலும் கருணையாலும் ஆசீர்வதித்த மூன்று பெண்கள்!" ...
வாக்குரிமைப் பேரணி: பிகாரிலிருந்து சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்!
தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் பிகாரிலிருந்து சென்னை திரும்பினார்.
பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்தத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து எதிா்க்கட்சிகள் சாா்பிலான வாக்குரிமை பயணத்தை பிகாரில் ஞாயிற்றுக்கிழமை(ஆக.17) தொடங்கி நடத்தி வருகிறார் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி.
இந்நிலையில் ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ், பிரியங்கா காந்தி உள்ளிட்ட பல முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களுடன் சேர்ந்து இன்று(ஆக. 27) பிகாரின் முஸாஃபர்பூரில் நடைபெற்ற வாக்குரிமைப் பேரணியில் பங்கேற்ற மு. க. ஸ்டாலின் தமது பயணத்தை முடித்துக்கொண்டு இன்று மாலை சென்னை வந்தடைந்தார். அவருடன் திமுக எம்.பி. கனிமொழியும் பிகார் சென்றிருந்தார்.