குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: சுதர்ஷன் ரெட்டிக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் முழு ஆத...
விஷப்பூச்சி கடித்து மாற்றுத்திறனாளி சிறுவன் உயிரிழப்பு - வேலூரில் அதிர்ச்சி!
வேலூர், விருப்பாட்சிபுரம் காந்தி நகரைச் சேர்ந்த முடிதிருத்தும் சலூன் தொழிலாளி ரமேஷ். இவரின் 13 வயது மகன் சஞ்சய், வாய்பேச முடியாத மாற்றுத் திறனாளி ஆவார். விநாயகர் சதுர்த்தியையொட்டி, நேற்று இரவு 8 மணியளவில், விருப்பாட்சிபுரம் பூந்தோட்டம் அருகேயுள்ள புதர் பகுதியில் அருகம்புல் தேடி சிறுவன் சஞ்சய் சென்றிருக்கிறான். அப்போது, ஏதோவொரு விஷப்பூச்சி கடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், காலில் வலி ஏற்பட்டு சிறுவன் துடித்திருக்கிறான்.

பெற்றோர் சிறுவனை மீட்டு, வேலூர் அடுக்கம்பாறையிலுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி இன்று அதிகாலை சிறுவன் சஞ்சய் உயிரிழந்துவிட்டான். இதையடுத்து, பிரேத பரிசோதனைக்காக சிறுவனின் உடல் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக, பாகாயம் காவல் நிலையப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சிறுவன் என்ன வகை விஷப்பூச்சி கடித்து உயிரிழந்தான்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.