``நீ இல்லை என்றால்'' - காதலன் கண்முன்னே உயிரை மாய்த்த காதலி; சென்னை ராயபுரத்தில் சோகம்
சென்னை ராயபுரம் புதுமனை குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஹர்சிதா(24). இவர் கல்லூரியில் படிக்குபோதே வேப்பேரியைச் சேர்ந்த தர்ஷன் (26) என்பவரைக் காதலித்து வந்திருக்கிறார். இவர்களின் காதல் விவகாரம் இருவீட்டாருக்கும் தெரியவந்திருக்கிறது.
ஆரம்பத்தில் இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தும், இறுதியில் திருமணத்துக்கு சம்மதித்திருக்கின்றனர். அதன் அடிப்படிடையில் தர்ஷனுக்கும் ஹர்சிதாவுக்கும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது.
இந்த நிலையில், நேற்று இருவருக்கும் மத்தியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகத் தெரிகிறது. அதனால் தர்ஷன் திருமணத்தை நிறுத்துவதாகத் தெரிவித்திருக்கிறார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஹர்சிதா தர்ஷன் வீட்டுக்கேச் சென்று காதலன் தர்ஷனிடம் மன்னிப்புக் கேட்டிருக்கிறார்.

ஆனாலும் தர்ஷன் சமாதானம் ஆனதாகத் தெரியவில்லை. அதனால், நீ இல்லை என்றால் உயிருடன் இருக்க மாட்டேன் என தர்ஷனிடம் தெரிவித்திருக்கிறார்.
இதை மிரட்டுவதாகக் கருதிய தர்ஷன் அது உன் விருப்பம் என பதிலளித்திருக்கிறார். இதனால் விரக்திக்குச் சென்ற ஹரிசிதா மொட்டைமாடியிலிருந்து கீழே குதித்திருக்கிறார்.
அதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு தர்ஷிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும், தற்கொலைக்கு தூண்டியதாக தர்ஷன் மீதும் காவல்துறை வழக்கு பதிவு செய்திருக்கிறது.