மாதம் ரூ.1500: `பெண்களுக்கான திட்டத்தில் எப்படி ஆண்கள்?' - மகாராஷ்டிரா அரசு அதிர...
ரவி மோகன் தயாரிப்பு நிறுவனம்! ஒரே நேரத்தில் 3 படங்கள்!
நடிகர் ரவி மோகன் தன் தயாரிப்பு நிறுவனத்தை இன்று துவங்கியுள்ளார்.
நடிகர் ரவி மோகன் தன் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்ததிலிருந்து சர்ச்சைகளிலும் இருக்கிறார். ஆனால், இதற்கிடையே ஜீனி, கராத்தே பாபு, பராசக்தி ஆகிய படங்களில் நடித்தும் வருகிறார்.
இதில், ஜீனி மற்றும் கராத்தே பாபு படங்கள் இந்தாண்டே வெளியாகவுள்ளன. அடுத்ததாக, பிரபல இயக்குநர்களிடம் கதை கேட்டு வருகிறார்.
இந்த நிலையில், இன்று ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தையும் துவங்கியுள்ளார். அதற்கான அறிமுக விழா சென்னையில் நடைபெற்று வருகிறது. நிகழ்வில், நடிகர்கள் சிவகார்த்திகேயன், சிவராஜ் குமார், எஸ்ஜே சூர்யா, பிரபல இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் ஒரே நேரத்தில் மூன்று திரைப்படங்களை ரவி மோகன் தயாரிக்க உள்ளார். அதில், முதல் படமாக ரவி மோகன் இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிக்கிறார்.
இப்படம் பான் இந்திய திரைப்படமாக உருவாகவுள்ளதாகவும் அனிமல் படத்திற்கு இசையமைத்த ஹர்ஷவர்த்தன் இசையமைக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க: பிரபு தேவா, வடிவேலு படத்தின் பூஜை!