செய்திகள் :

சென்னை: ``நான் காதலிக்கும் பெண்ணுடன் அவர் பழகினார்'' - 2 பேரை காரில் கடத்திய கல்லூரி மாணவர்கள்

post image

சென்னை, காசிமேடு பகுதியைச் சேர்ந்தவர் கிங்ஸ்டன் (21). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இவர் தன்னுடைய நண்பர்களுடன் 24-ம் தேதி மாலை, புது வண்ணாரப்பேட்டை, இளையா தெருவில் உள்ள நீச்சல் குளத்தில் குளித்துவிட்டு வெளியே வந்தார்.

அப்போது அங்கு காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், கிங்ஸ்டனிடம் பேசினர். பின்னர் கிங்ஸ்டனை காரில் ஏறும்படி அந்தக் கும்பல் கூறியது.

kidnap

அதற்கு கிங்ஸ்டன் மறுக்க, ஒரு பெண்ணின் பெயரைக் கூறி, அவரின் காதலன் குறித்து பேச வேண்டும் என அந்தக் கும்பல் கூறியது. இதையடுத்து கிங்ஸ்டன் அந்தக் காரில் ஏறியிருக்கிறார்.

பின்னர் செல்லும் வழியில் கிங்ஸ்டனின் நண்பன் ரோகித்தையும் அந்தக் கும்பல் காரில் ஏற்றி அழைத்து சென்றிருக்கிறது.

இதைக் கவனித்த கிங்ஸ்டனின் நண்பர்கள், தங்களின் டூவிலரில் காரை பின்தொடர்ந்தனர். இதையடுத்து காசிமேடு பகுதியில் கார் நிற்கவும் கிங்ஸ்டன், ரோகித் ஆகியோர் காரை விட்டு இறங்கினர்.

அப்போது காரைப் பின்தொடர்ந்து வந்த கிங்ஸ்டனின் நண்பர்கள் அங்கு வந்தனர். அதைப்பார்த்ததும் அந்தக் கடத்தல் கும்பல் காரை வேகமாக ஓட்டி அங்கிருந்து தப்பிச் சென்றது.

இதையடுத்து கிங்ஸ்டன் தரப்பில் தன்னையும் தன் நண்பரையும் ஒரு கும்பல் காரில் கடத்திய தகவலை புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகாராக கொடுத்தனர்.

அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். விசாரணையில் கிங்ஸ்டன், ரோகித்தை கடத்தியது வேளச்சேரியைச் சேர்ந்த மோகன்தாஸ் (21), ஆர்.ஏ புரத்தைச் சேர்ந்த தனுஷ்ராஜ் (22), பள்ளிக்காரணையைச் சேர்ந்த சாய் பிரசன்னா (21), பெருங்குடியைச் சேர்ந்த கிருஷ்ணன், பள்ளிக்காரணையைச் சேர்ந்த அபிஷேக் எனத் தெரியவந்தது.

கைது

அவர்களை போலீஸார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் மோகன்தாஸ் என்பவர் கல்லூரி மாணவர். இவர் ஒரு பெண்ணைக் காதலித்து வந்திருக்கிறார். அந்தப் பெண்ணுடன் கிங்ஸ்டன் பழகி வந்திருக்கிறார். அதனால் ஆத்திரமடைந்த மோகன்தாஸ், தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து கிங்ஸ்டனை கடத்திச் சென்றிருக்கிறார்.

அப்போது கிங்ஸ்டனுக்கு ஆதரவாக பேசிய ரோகித்தையும் இந்தக் கும்பல் கடத்தியிருக்கிறது. இதையடுத்து 5 கல்லூரி மாணவர்களையும் போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

``இன்ஸ்டா ரீல்ஸ், பியூட்டி பார்லர் வேண்டாம் என்றேன்'' - பெண்ணை உயிரோடு எரித்த கணவர் வாக்குமூலம்

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிக்கி (28) என்ற குடும்ப பெண்ணை அவரது கணவரும், குடும்பத்தினரும் சேர்ந்து ரூ.36 லட்சம் வரதட்சணை கேட்டு அடித்து உதைத்து உயிரோடு தீவைத்து எர... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூர்: மான் வேட்டைக்கு சென்ற தலைமை காவலர்; வனத்துறையினரிடம் சிக்கியது எப்படி?

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் சரணாலயம், சாம்பல் நிற அணில்... மேலும் பார்க்க

சேலம்: பிறந்த பெண் குழந்தையை ரூ.1.20 லட்சத்துக்கு விற்ற தம்பதி; 4 பேர் கைது - விசாரணையில் அதிர்ச்சி

சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றியம் ரெட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ். இவரது மனைவி சிவகாமி. இவர்களுக்கு ஏற்கெனவே ஒரு பெண் குழந்தைகள் உள்ளது.இந்த நிலையில், மீண்டும் கர்ப்பம் அடைந்த சிவகாமிக்கு, கடந்... மேலும் பார்க்க

UP வரதட்சணை கொடுமை: "அம்மா மீது தீ வைத்தனர்" - குழந்தை கண்முன் தாயை எரித்து கொன்ற கணவர் குடும்பம்

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள சிர்ஷா என்ற இடத்தில் வசிப்பவர் விபின். இவரது மனைவி நிக்கி. இவர்களுக்குக் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. நிக்கியின் மூத்த சகோதரி காஞ்சன் என்பவரையும்... மேலும் பார்க்க

மும்பை: ஒரு வங்கிக்கணக்கு விலை ரூ.7000; ஏழைகளிடம் வங்கிக்கணக்கை வாடகைக்கு வாங்கி மோசடி செய்த கும்பல்

சமீபகாலமாக இணையத்தளக் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. கடன் தருவதாகவோ அல்லது பங்குச்சந்தை முதலீடு, டிஜிட்டல் கைது எனப் பல்வேறு வழிகளில் சைபர் கிரிமினல்கள் பொதுமக்களிடம் பணத்தைப் பறித்து வருகின்றனர். இ... மேலும் பார்க்க

மும்பை: ரயில் குப்பை தொட்டியில் 6 வயது குழந்தையின் பிணம்; விசாரணையில் பகிர் தகவல்; என்ன நடந்தது?

உத்தரப்பிரதேசத்திலிருந்து மும்பை லோக்மான்ய திலக் டெர்மினஸ் ரயில் நிலையம் வந்த குஷிநகர் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏ.சி. பெட்டியில் கழிவறைக்குள் இருந்த குப்பை தொட்டிகளை ஊழியர்கள் சுத்தம் செய்தபோது ஒரு குப்பை த... மேலும் பார்க்க