செய்திகள் :

சரிவு பகுதியில் அத்துமீறி வுட் ஹவுஸ் கட்டிய ஆந்திரா க்ரூப்; அதிரடி காட்டிய அதிகாரிகள்- பின்னணி என்ன?

post image

இந்தியாவின் முதல் பல்லுயிர் பெருக்க வள மண்டலமாக அறிவிக்கப்பட்டிருக்கும் நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றுலாவின் பெயரால் பல்வேறு விதிமீறல்களை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக சிறு, குறு விவசாயிகளின் தேயிலை தோட்டங்களை மொத்தமாக விலை கொடுத்து வாங்கி, பயிர்களை அழித்து ஆடம்பர தங்கும் விடுதிகளை கட்டி வருகின்றனர்.

அத்துமீறி கட்டுமானம்

இயற்கை எழில் நிறைந்த பகுதிகளில் தங்கும் விடுதிகளை கட்டுகிறோம் என்கிற பெயரில் மலை உச்சிகளிலும் , சரிவுகளிலும் அத்துமீறி ஆபத்தான கட்டுமானங்களை பெரிய அளவில் எழுப்பி வருகின்றனர். இதுபோன்ற விதிமீறல் கட்டுமானங்கள் நீலகிரி முழுவதும் பரவலாக நடைபெற்று வந்தாலும், மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டுச் சென்று அழுத்தம் கொடுக்கும் பட்சத்தில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஊட்டி அருகில் உள்ள பாலகொலா ஊராட்சிக்கு உட்பட்ட தலக்காடு மட்டம் பகுதியில் ஆபத்தான சரிவில் கட்டப்பட்டிருக்கும் வுட் ஹவுஸ் கட்டுமானங்களை ஆய்வு மேற்கொண்ட வருவாய்த்துறை அலுவலர்கள் சீல் வைத்துள்ளனர்.

பின்னணி குறித்து தெரிவித்த வருவாய்த்துறையினர், " எங்களுக்கு கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில் இந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டோம். சரிவான பகுதியில் அத்துமீறி வுட் ஹவுஸ் கட்டப்பட்டு வருவதைக் கண்டறிந்தோம்.

சீல் வைத்த அரசு அலுவலர்கள்

மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் கீழ் அமைக்கப்பட்டுள்ள முறையற்ற கட்டுமானங்களை கண்காணிக்கும் குழுவின் தலைவரான மாவட்ட வருவாய் அலுவலர் மூலம் விசாரணை நடத்துப்பட்டது. ஆந்திராவை சேர்ந்த தானுமேத்தா, சுனில் உள்ளிட்ட எட்டு நபர்களின் வுட் ஹவுஸ் கட்டுமானங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது " என்றார்.

கனிம வளக் கொள்ளையை தட்டிக் கேட்டவர் கொலை: தேனியில் பரபரப்பு!

தேனி மாவட்டம், கம்பம் பாரதியார் நகர் பகுதியில் வசித்து வந்தவர் சதீஷ்குமார் என்ற சசி ( 40), கம்பத்தில் இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் தொழில் செய்து வந்தார். கம்பம் அருகே உள்ள காமய கவுண்டன்பட்டி பேரூர... மேலும் பார்க்க

காதலனை நள்ளிரவில் கணவன் வீட்டிற்கு அழைத்த இளம்பெண்; தந்தை செய்த பயங்கரம்- மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

மகாராஷ்டிரா மாநிலம், நாண்டெட் மாவட்டத்தில் உள்ள போர்ஜுனி என்ற கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சீவானி. இவருக்கு கடந்த ஆண்டு அருகில் உள்ள கோலேகாவ் என்ற கிராமத்தை சேர்ந்த சுதாகர் என்பவருடன் திருமணமானது. திருமணத்... மேலும் பார்க்க

``நீ இல்லை என்றால்'' - காதலன் கண்முன்னே உயிரை மாய்த்த காதலி; சென்னை ராயபுரத்தில் சோகம்

சென்னை ராயபுரம் புதுமனை குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஹர்சிதா(24). இவர் கல்லூரியில் படிக்குபோதே வேப்பேரியைச் சேர்ந்த தர்ஷன் (26) என்பவரைக் காதலித்து வந்திருக்கிறார். இவர்களின் காதல் விவகாரம் இருவீட்டார... மேலும் பார்க்க

திருமணம் மீறிய உறவு; காதலி வாயில் வெடிகுண்டு வைத்து படுகொலை செய்த காதலன் - லாட்ஜில் நடந்த கொடூரம்

திருமணம் மீறிய உறவுகர்நாடகா மாநிலம் மைசூரு மாவட்டத்தில் உள்ள கெராசனஹள்ளி என்ற கிராமத்தை சேர்ந்தவர் ரக்‌ஷிதா. இவர் ஏற்கெனவே திருமணமானவர். ஆனால் தனது உறவினரான சித்தராஜு என்பவரையும் காதலித்து வந்தார். ரக... மேலும் பார்க்க

``இன்ஸ்டா ரீல்ஸ், பியூட்டி பார்லர் வேண்டாம் என்றேன்'' - பெண்ணை உயிரோடு எரித்த கணவர் வாக்குமூலம்

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிக்கி (28) என்ற குடும்ப பெண்ணை அவரது கணவரும், குடும்பத்தினரும் சேர்ந்து ரூ.36 லட்சம் வரதட்சணை கேட்டு அடித்து உதைத்து உயிரோடு தீவைத்து எர... மேலும் பார்க்க

சென்னை: ``நான் காதலிக்கும் பெண்ணுடன் அவர் பழகினார்'' - 2 பேரை காரில் கடத்திய கல்லூரி மாணவர்கள்

சென்னை, காசிமேடு பகுதியைச் சேர்ந்தவர் கிங்ஸ்டன் (21). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் தன்னுடைய நண்பர்களுடன் 24-ம் தேதி மாலை, புது வண்ணாரப்பேட்டை, இளையா தெருவில் உள்ள நீச்சல் குளத... மேலும் பார்க்க