செய்திகள் :

நெல்லையில் செப். 7 வாக்குத் திருட்டு விளக்க மாநாடு! பிரியங்கா பங்கேற்பு?

post image

திருநெல்வேலியில் வருகின்ற செப்டம்பர் 7 ஆம் தேதி வாக்குத் திருட்டு விளக்க மாநாடு நடத்தப்படும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.

இந்த மாநாட்டில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பங்கேற்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்காகவும் பிகாரில் மாபெரும் பேரணியை ராகுல் காந்தி நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், திருநெல்வேலியில் வருகின்ற செப்டம்பர் 7 ஆம் தேதி வாக்குத் திருட்டு விளக்க மாநாடு மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசியலமைப்பை காக்கவும் நமது வாக்குரிமையை பாதுகாக்கவும் அனைவரும் அணிதிரண்டு வரவேண்டும் என்று தொண்டர்களுக்கு செல்வப்பெருந்தகை அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும், இந்த மாநாட்டில் பிரியங்கா காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Conference to explain vote rigging on Sept. 7 in Nellai

இதையும் படிக்க : ஓணம்: சென்னை - கண்ணூர் இடையே சிறப்பு ரயில்! முன்பதிவு தொடங்கியது!

கோவை, நீலகிரிக்கு 3 நாள்கள் கனமழை எச்சரிக்கை!

கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று முதல் 3 நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் பார்க்க

அண்ணா பல்கலை. பொறியியல் படிப்பில் செய்யறிவு(ஏஐ) பாடம் கட்டாயம்!

சென்னை அண்ணா பல்கலைக்கழகங்களில் பொறியியல் படிப்புகளில் செய்யறிவு(ஏஐ) பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் படிப்புகளில் உள்ள பாடங்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன... மேலும் பார்க்க

விஜய்யின் சில கருத்துகள் ஏற்புடையதாக இல்லை: ஓபிஎஸ்

தவெக மாநாட்டில் விஜய்யின் சில கருத்துகள் ஏற்புடையதாக இல்லை என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார். தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. ... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு!

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து இன்று(ஆக.27) காலை வினாடிக்கு 6871 கன அடியாக சரிந்தது.அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு ... மேலும் பார்க்க

விநாயகர் சதுர்த்தி: தவெக தலைவர் விஜய் வாழ்த்து!

விநாயகர் சதுர்த்தியையொட்டி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி தமிழகம் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் இன்று(ஆக.27) கோலாகலமா... மேலும் பார்க்க

ஓணம்: சென்னை - கண்ணூர் இடையே சிறப்பு ரயில்! முன்பதிவு தொடங்கியது!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் - கண்ணூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.அதேபோல், கண்ணூர் - பெங்களூரு, பெங்களூரு - கண்ணூர் இடையேயும் சிறப்பு ரயில் இயக்கப்ப... மேலும் பார்க்க