செய்திகள் :

விஜய்யின் சில கருத்துகள் ஏற்புடையதாக இல்லை: ஓபிஎஸ்

post image

தவெக மாநாட்டில் விஜய்யின் சில கருத்துகள் ஏற்புடையதாக இல்லை என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

"என்னைப் பொருத்தவரை அதிமுகவில் பிரிந்து சென்ற அனைவரும் ஓரணியில் சேர்ந்தால் மட்டுமே தமிழகத்தில் அதிமுக வெற்றி பெறும் சூழ்நிலை உருவாகும். இதுதான் என்னுடைய நிலைப்பாடு. இதை மற்றவர்களும் புரிந்துகொள்ள வேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே எனது எண்ணம்.

அதிமுகவை எம்ஜிஆர், மக்கள் இயக்கமாகத்தான் உருவாக்கினார். அதனை ஜெயலலிதா திறம்பட வழி நடத்தினார். அந்த வழியில் வந்த இயக்கத்தை யாராவது பிளவுபடுத்த நினைத்தால் அது முடியாது. 

வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்காக மட்டுமே வாக்கு கேட்பேன். தனிப்பட்ட முறையில் தனக்கு எந்த இலக்கும் இல்லை. அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதே எனது நோக்கம். அதிமுக எப்போதும் மக்கள் இயக்கம்தான். அதை யாராலும் சிதைக்க முடியாது. கூட்டணி குறித்து தேர்தலின்போது தெரியும். தேர்தலுக்கு இன்னும் நாள் இருக்கிறது.

ஒரு அரசியல் கட்சியை நடத்துபவர்கள், தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் அனைவரையும் ஒருசேர கருதி அரசியல் நாகரிகம் கருதி பேச வேண்டும். விஜய்யின் பேச்சில் சில கருத்துகள் ஏற்புடையதாக அல்ல. மாநாட்டில் விஜயின் கருத்துகள் அரசியல் ரீதியாக ஈர்க்கும் கருத்தாக இல்லை. அரசியல் கட்சியின் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் அரசியல் நாகரிகம் கருதி பேச வேண்டும்" என்று கூறினார்.

Former Chief Minister O. Panneerselvam has said that some of Vijay's comments at the TDP conference were inappropriate.

தவெக மாநாட்டில் சிறப்பான ஏற்பாடுகள்; ஜன. 9 வரை காத்திருங்கள்: பிரேமலதா

தேமுதிக யாருடன் கூட்டணி வைக்கும் என்பது ஜனவரி 9 ஆம் தேதி கடலூரில் நடைபெறும் மாநாட்டில்தான் அறிவிப்போம் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். தேமுதிக திருச்சி மாவட்ட செயலாளர் டிவ... மேலும் பார்க்க

கோவை, நீலகிரிக்கு 3 நாள்கள் கனமழை எச்சரிக்கை!

கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று முதல் 3 நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் பார்க்க

அண்ணா பல்கலை. பொறியியல் படிப்பில் செய்யறிவு(ஏஐ) பாடம் கட்டாயம்!

சென்னை அண்ணா பல்கலைக்கழகங்களில் பொறியியல் படிப்புகளில் செய்யறிவு(ஏஐ) பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் படிப்புகளில் உள்ள பாடங்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு!

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து இன்று(ஆக.27) காலை வினாடிக்கு 6871 கன அடியாக சரிந்தது.அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு ... மேலும் பார்க்க

நெல்லையில் செப். 7 வாக்குத் திருட்டு விளக்க மாநாடு! பிரியங்கா பங்கேற்பு?

திருநெல்வேலியில் வருகின்ற செப்டம்பர் 7 ஆம் தேதி வாக்குத் திருட்டு விளக்க மாநாடு நடத்தப்படும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.இந்த மாநாட்டில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிர... மேலும் பார்க்க

விநாயகர் சதுர்த்தி: தவெக தலைவர் விஜய் வாழ்த்து!

விநாயகர் சதுர்த்தியையொட்டி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி தமிழகம் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் இன்று(ஆக.27) கோலாகலமா... மேலும் பார்க்க