செய்திகள் :

குஜராத்தில் முகவரி இல்லாத கட்சிகளுக்கு ரூ. 4,300 கோடி நன்கொடை! ராகுல் கேள்வி

post image

குஜராத்தில் யாரும் அறியாத பெயர்கள் கொண்ட கட்சிகளுக்கு ரூ. 4,300 கோடி நன்கொடை கிடைத்திருப்பது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் விசாரிக்குமா என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றும் நோக்கில் ராகுல் காந்தி தலைமையில் எதிா்க்கட்சிகள் ஒன்றிணைந்து வாக்குரிமை பேரணியை பிகாரில் நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, குஜராத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள யாரும் அறியாத அரசியல் கட்சிகள் ரூ. 4,300 கோடி நன்கொடை பெற்றிருப்பது குறித்து நாளிதழில் வெளியான செய்தியைப் பகிர்ந்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

அதில் தெரிவித்திருப்பதாவது:

”குஜராத்தில் சில பெயர் தெரியாத கட்சிகள் உள்ளன, அவற்றின் பெயர்களை யாரும் கேள்விப்பட்டதே இல்லை. ஆனால், அந்த கட்சிகள் ரூ. 4,300 கோடி மதிப்புள்ள நன்கொடைகளைப் பெற்றுள்ளன.

இந்தக் கட்சிகள் மிகக் குறைந்த தேர்தல்களில் மட்டுமே போட்டியிட்டுள்ளன. குறைவாகவே செலவிட்டுள்ளன.

இந்த ஆயிரக்கணக்கான கோடிகள் எங்கிருந்து வந்தன? கட்சிகளை யார் நடத்துகிறார்கள்? பணம் எங்கே போனது?

தேர்தல் ஆணையம் விசாரிக்குமா? அல்லது இங்கும் பிரமாணப் பத்திரங்களைக் கேட்குமா? அல்லது இந்த முறையும் மறைக்கும் வகையில் சட்டத்தையே மாற்றுமா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

முகவரி இல்லாத 10 கட்சிகளும் ரூ. 4,300 கோடி நன்கொடையும்..

ஹிந்தி நாளிதழில் வெளியிடப்பட்ட செய்தியில் தெரிவித்திருப்பதாவது:

குஜராத்தில் பதிவுசெய்யப்பட்ட யாரும் அறியாத 10 அரசியல் கட்சிகள் எதிர்பாராத நன்கொடைகளைப் பெற்றுள்ளன. இந்த கட்சிகள் 2019 - 20 முதல் 2023 - 24 வரையிலான ஐந்து ஆண்டுகளில் நன்கொடையாளர்களிடமிருந்து ரூ. 4,300 கோடி நன்கொடைகளைப் பெற்றுள்ளன.

இந்த காலகட்டத்தில் குஜராத்தில் இரண்டு மக்களவைத் தேர்தலும் ஒரு சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெற்றுள்ளன. இந்த மூன்று தேர்தல்களில் 10 கட்சிகளைச் சேர்த்து மொத்தம் 43 வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிட்டுள்ளனர். அவர்கள் பெற்ற மொத்த வாக்குகள் 54,069 மட்டுமே.

மேலும், தேர்தல் செலவு அறிக்கையில் செலவிடப்பட்ட தொகையாக ரூ. 39.02 லட்சம் மட்டுமே காட்டியிருக்கும் நிலையில், தணிக்கை அறிக்கை ரூ. 3,500 கோடி செலவிட்டதாக அந்த கட்சிகள் தெரிவித்துள்ளன.

கட்சியின் பெயர்கள்

ஜனநாயக சக்தி கட்சி

பாரதிய தேசிய ஜனதா தளம்

சுதந்திர பேச்சு கட்சி

புதிய இந்தியா ஐக்கிய கட்சி

சத்யவாதி ரக்‌ஷத் கட்சி

இந்திய மக்கள் மன்றம்

சௌராஷ்டிர ஜனதா கட்சி

ஜன் மேன் கட்சி

மனித உரிமைகள் தேசிய கட்சி

கரிப் கல்யாண் கட்சி

Lok Sabha Opposition Leader Rahul Gandhi has questioned whether the Election Commission of India will investigate the Rs 4,300 crore donation received by unknown parties in Gujarat.

இதையும் படிக்க : பிகார்: ராகுல் பேரணியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு!

பிகார்: ராகுல் பேரணியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு!

பிகாரில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நடத்தும் வாக்குரிமை பேரணியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டுள்ளார். பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்தத்துக்கு எதிா்ப்பு தெரிவித்தும், வாக்... மேலும் பார்க்க

நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு! ஐடி ஊழியரை தாக்கிய விவகாரம்!

கேரளத்தில் ஐடி ஊழியரை கடத்தி தாக்கிய விவகாரத்தில் நடிகை லட்சுமி மேனன் தலைமறைவாக இருப்பதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் பார்க்க

விநாயகர் சதுர்த்தி: ராகுல் காந்தி வாழ்த்து!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி தமிழகம் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் இன்று(ஆக... மேலும் பார்க்க

கனமழை, வெள்ளத்தில் தத்தளிக்கும் ஜம்மு - காஷ்மீர்: நிலச்சரிவில் சிக்கி 30 பேர் பலி!

ஜம்மு - காஷ்மீரில் திடீரென பெய்த கனமழையால் புதன்கிழமை ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நிலச்சரிவில் சிக்கி 30 பேர் பரிதாபமாக உயிழந்தனர்.ஜம்மு - காஷ்மீரில் கிஷ்த்வர் மற்றும் தோடா மாவட்டங்களில் திடீரென பெய்த க... மேலும் பார்க்க

பக்தியும் நம்பிக்கையும் நிறைந்த நாளில் ஐஸ்வரியத்தை வழங்கட்டும்! - பிரதமர் மோடி

பக்தியும் நம்பிக்கையும் நிறைந்த இன்றைய நாளில் அனைவருக்கும் ஐஸ்வரியத்தை வழங்கட்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி தமிழகம் மட்டுமின்றி, இந்... மேலும் பார்க்க

டிரம்ப்பின் அழைப்பை 4 முறை மறுத்த பிரதமர் மோடி?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அழைப்பை பிரதமர் நரேந்திர மோடி நிராகரித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.ரஷியாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது வரி விதிப்பதாகக் கூறி, இந்தியா மீது அமெரிக்க அதிபர் டி... மேலும் பார்க்க