PM MODI-யின் கல்வி தகுதியை இனி யாரும் கேட்கக்கூடாதா? Imperfect Show | 26.08.2025...
பக்தியும் நம்பிக்கையும் நிறைந்த நாளில் ஐஸ்வரியத்தை வழங்கட்டும்! - பிரதமர் மோடி
பக்தியும் நம்பிக்கையும் நிறைந்த இன்றைய நாளில் அனைவருக்கும் ஐஸ்வரியத்தை வழங்கட்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி தமிழகம் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் இன்று(ஆக.27) கோலாகலமாகக் கொண்டாப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தியையொட்டி, இந்து இயக்கங்களான இந்து முன்னணி, விசுவ ஹிந்து பரிஷத், சிவசேனை, இந்து மக்கள் கட்சி, பாஜக, ஆர்எஸ்எஸ். உள்ளிட்ட இந்து அமைப்புகள் பல்வேறு விநாயகர் சிலைகளை அமைத்து விநாயகர் சதுர்த்தியைக் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றன.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி வாழ்த்துப் பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
அந்தப் பதிவில், “உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள். பக்தியும் நம்பிக்கையும் நிறைந்த இந்த புனிதமான தருணத்தில் அனைவருக்கும் ஐஸ்வரியத்தை வழங்கட்டும்.
கணேஷ பகவான் தனது பக்தர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி, அமைதி மற்றும் ஆரோக்கியத்தை வழங்க பிரார்த்திக்கிறேன். கணபதி பப்பா மோரியா!” எனப் பதிவிட்டுள்ளார்.