செய்திகள் :

தனிநபர் தாக்குதல் தொடுப்பது ஆர்எஸ்எஸ் வழக்கம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

post image

"தனிநபர்கள் மீது விமர்சனத் தாக்குதல்களை நடத்துவது ஆர்எஸ்எஸ் அமைப்பின் வழிமுறை. மகாத்மா காந்தி மீதும் அந்த அமைப்பு தனிநபர் விமர்சனத் தாக்குதலை நடத்தியது' என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார்.

பிகாரில் மகா கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு பெற்ற வாக்குரிமை யாத்திரையை ஓர் இடைவேளைக்குப் பின் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை மீண்டும் தொடங்கி வைத்தார். அந்த மாநிலத்தில் தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 17-ஆம் தேதிமுதல் இந்த யாத்திரை நடைபெற்று வருகிறது.

இதனிடையே, பிகாரில் மகா கூட்டணிக் கட்சிகளுடனான கலந்துரையாடலில் ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை பங்கேற்றார். இது தொடர்பான விடியோவை அவர் வெளியிட்டுள்ளார். அந்த விடியோவில் பிகார் மாநிலம், அராரியா நகரில் உள்ள சாலையோர உணவகம் ஒன்றில் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், சிபிஐ (எம்எல்) கட்சியின் தீபாங்கர் பட்டாச்சார்யா, விகாஸ்ஷீல் இன்சான் கட்சித் தலைவர் முகேஷ் சஹானி, மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி, பிகார் மாநில காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் உள்ளிட்டோருடன் ராகுல் தேநீர் அருந்தும் காட்சி இடம்பெற்றுள்ளது.

அவர்களுடன் ராகுல் காந்தி பேசுகையில் "தனிநபர்கள் மீது விமர்சனத் தாக்குதல்களை நடத்துவது ஆர்எஸ்எஸ் அமைப்பின் வழிமுறை.

மகாத்மா காந்தி மீதும் அந்த அமைப்பு தொடர்ந்து தனிநபர் விமர்சனத் தாக்குதல்களை நடத்தி வந்தது. அவர்மீது ஆர்எஸ்எஸ் எந்த அளவுக்கு அவதூறு பரப்பியது என்பதை மக்கள் நினைவில் கொள்ளவில்லை.

மகாத்மா காந்தியைப் பற்றி அந்த அமைப்பு தொடர்ந்து பொய்களைப் பரப்பிவந்தது' என்று தெரிவித்தார்.

பாஜக ஆட்சேபம்

பிகாரில் நடைபெறும் வாக்குரிமை யாத்திரையில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பங்கேற்றதற்கு பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான தர்மேந்திர பிரதான் ஆட்சேபம் தெரிவித்தார். இது தொடர்பாக பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தர்மேந்திர பிரதான் "பிகாரின் மரபணு தாழ்ந்தது என்று ரேவந்த் ரெட்டி கடந்த காலங்களில் கருத்து தெரிவித்தார். அவரை பிகாரில் நடைபெறும் வாக்காளர் அதிகார யாத்திரையில் பங்கேற்க அழைத்ததற்காக ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் மன்னிப்பு கேட்க வேண்டும்.

வாக்கு திருட்டு தொடர்பாக இண்டி கூட்டணிக் கட்சிகள் வதந்திகளைப் பரப்பி வருகின்றன. வாக்காளர் பட்டியலில் போலியாக இடம்பெற்றிருந்த லட்சக்கணக்கான பெயர்கள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளன. ரோஹிங்கயா அகதிகளுக்கும் வங்கதேசத்தவர்களுக்குமான சத்திரம் அல்ல இந்தியா' என்று தெரிவித்தார்.

எஸ்சிஓ மாநாட்டில் பயங்கரவாதத்துக்கு எதிரான கண்டனம்: இந்தியா முன்னெடுப்பு

சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) வருடாந்திர உச்சி மாநாட்டு கூட்டறிக்கையில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிரான கண்டனத்தை உறுதிப்படுத்த பணியாற்றி வருவதா... மேலும் பார்க்க

செப்டம்பரில் 36.76 டிஎம்சி காவிரி நீரை திறந்துவிட தமிழகம் வலியுறுத்தல்

நமது நிருபர்உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் செப்டம்பர் மாதத்திற்குரிய 36.76 டிஎம்சி நீரை கர்நாடகம் திறந்துவிடுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காவிரி நதிநீர் ம... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீா்திருத்தம்: பிரதமா் மோடிக்கு ஐடிசி தலைவா் பாராட்டு

சரக்கு-சேவை வரியில் (ஜிஎஸ்டி) சீா்திருத்தம் மேற்கொள்வது தொடா்பான பிரதமா் நரேந்திர மோடியின் அறிவிப்புக்கு நுகா்பொருள் விற்பனையில் முன்னணியில் உள்ள ஐடிசி நிறுவனத்தின் தலைவா் சஞ்சீவ் புரி பாராட்டுத் தெரி... மேலும் பார்க்க

டியூஷன் செல்லும் மூன்றில் ஒரு பங்கு பள்ளி மாணவா்கள்: மத்திய அரசின் ஆய்வில் தகவல்

பள்ளி மாணவா்களில் மூன்றில் ஒரு பகுதியினா் பாடங்களில் தெளிவுபெற தனியாா் பயிற்சி மையங்களுக்கும் (டியூஷன்) செல்வது மத்திய அரசின் ஆய்வில் தெரியவந்துள்ளது. நகா்ப்புறங்களில் இந்த போக்கு பொதுவான விஷயமாக இருப... மேலும் பார்க்க

மேற்கு வங்க மக்களை திருடா்கள் என்பதா? பிரதமா் மோடிக்கு மம்தா கண்டனம்

மேற்கு வங்க மக்கள் அனைவரையும் திருடா்கள் என்றும், மாநில முதல்வா் பதவிக்கு உரிய மரியாதை அளிக்காமலும் பிரதமா் மோடி பேசியதை எதிா்பாா்க்கவில்லை என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி கண்டனம் தெரிவித்துள... மேலும் பார்க்க

இந்தியா மீது 25% கூடுதல் வரி இன்று முதல் அமல்: அமெரிக்கா தெழிலாளா் சாா்ந்த துறைகள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்பு

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு ஏற்கெனவே 25 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், புதன்கிழமை முதல் கூடுதலாக 25 சதவீத வரி அமலாவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதன் காரணமாக, அமெரிக்... மேலும் பார்க்க