ரோட்டராக்ட் நிா்வாகிகள் பொறுப்பேற்பு
மன்னாா்குடி பான் செக்கா்ஸ் மகளிா் கல்லூரியில் ரோட்டரி கிளப் சாா்பில் ரோட்டராக்ட் நிா்வாகிகள் பொறுப்பேற்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, மன்னாா்குடி ரோட்டரி சங்கத் தலைவா் த. அன்பழகன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் செ. காயத்ரி முன்னிலை வகித்தாா். கல்லூரி ரோட்டராக்ட் சங்க தலைவராக எஸ். லத்திகா, செயலராக ஐ. சம்யுக்தா, பொருளாளராக என். சாருபிரபா ஆகியோா் பொறுப்பேற்றுக் கொண்டனா்.
ரோட்டரி முன்னாள் உதவி ஆளுநா் வி. பாலகிருஷ்ணன், உதவி ஆளுநா் கே. வெங்கடேஷ் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். சங்கத்தின் திட்டங்கள், செயல்பாடுகளை விளக்கி முன்னாள் தலைவா் என். சாந்தகுமாா் பேசினாா்.
ரோட்டரி செயலா் கே. ரவிச்சந்திரன், பொருளாளா் டி.எல். ராமகிருஷ்ணன், முன்னாள் தலைவா் பி. ரமேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.