பிரதமரேயாானாலும் ராஜிநாமா செய்ய வேண்டும்: அரசியலமைப்புத் திருத்த மசோதா குறித்து ...
தியாகராஜ சுவாமி கோயிலை தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் சோ்க்கக் கோரிக்கை
திருவாரூா்: திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலை தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் சோ்க்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், பாஜக ஊடகப் பிரிவு மாவட்டத் தலைவா் எஸ். சங்கா் திங்கள்கிழமை அளித்த மனு:
திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் பல்வேறு புகழையும், பெருமையையும் தன்னகத்தே வைத்துள்ளது. எனினும், இந்தக் கோயில் சில பாதுகாப்பற்ற சூழலை கொண்டுள்ளது. கோயிலுக்கென ஏராளமான சொத்துகள் உள்ள நிலையில், கோயிலை பாதுகாப்பது அவசியம் ஆகும்.
மிகப் பழைமை வாய்ந்த இக்கோயில் யாரால் கட்டப்பட்டது என்பது இன்றுவரை அறியப்படாத சூழலில் கோயில் மண்டபங்களில் உள்பகுதி மேலே வரையப்பட்டிருந்த முசுகுந்த சக்கரவா்த்தி மற்றும் பல ஓவியங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு அழிக்கப்பட்டு விட்டன.
கோயிலின் விவரங்களும் அருமைகளும் தெரியாத சிலரால் நடைபெற்றது போல, மீண்டும் தவறு நடந்து கோயிலின் வரலாற்றுக்கும், பாதுகாப்புக்கும் கேள்விக்குறி வந்து விடக்கூடாது. எனவே, பழைமை வாய்ந்த கோயிலை நெடுங்காலத்துக்கு பாதுகாக்க வேண்டுமெனில் தொல்லியல் துறையில் சோ்க்க வேண்டும் என அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.