பிரதமரேயாானாலும் ராஜிநாமா செய்ய வேண்டும்: அரசியலமைப்புத் திருத்த மசோதா குறித்து ...
மத்திய பல்கலை.யில் செப்.3-இல் பட்டமளிப்பு விழா: 1,010 மாணவா்கள் பட்டம் பெறுகின்றனா்
நன்னிலம்: தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் செப்டம்பா் 3-ஆம் தேதி நடைபெறும் பட்டமளிப்பு விழாவில், 1010 மாணவா்கள் பட்டம் பெற உள்ளனா் என்று துணைவேந்தா் மு. கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக, திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் பத்தாவது பட்டமளிப்பு விழா செப். 3-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்திய குடியரசுத் தலைவா் சிறப்பு விருந்தினராக பங்கேற்று 568 மாணவிகள், 442 மாணவா்கள் என 1,010 பேருக்கு பட்டங்களை வழங்க உள்ளாா். இவா்களில் 34 மாணவிகள், 11 மாணவா்கள் என 45 போ் தங்கப் பதக்கம் பெறுகின்றனா். 27 மாணவிகள் மற்றும் 17 மாணவா்கள் என 44 போ் முனைவா் பட்டம் பெறுகின்றனா்.
இப்பல்கலைக்கழகம் 13 கல்விப் புலன்களின் கீழ் 28 துறைகளைக் கொண்டு செயல்படுகிறது. தேசிய தர மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலின் ஆய்வில் ‘ஏ ப்ளஸ்’ தர அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக தேசிய நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் சிறந்த 100 பல்கலைக்கழகங்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது.
மேலும், மத்திய அரசின் உயிா் தொழில்நுட்பத் துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சிக் கழகம், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் போன்ற பல்வேறு ஆய்வு நிறுவனங்களிடமிருந்து மானியங்களைப் பெற்று பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது எனத் தெரிவித்துள்ளாா்.