சாலையை சீரமைக்க கோரிக்கை
நீடாமங்கலத்தில் சேதமடைந்த அணுகு சாலையை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீடாமங்கலம் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை பரவலாக மழை பெய்தது. இடி மின்னலுடன் பெய்த மழையால் மின்தடை ஏற்பட்டது. இந்த மழை காரணமாக நீடாமங்கலம் அண்ணா சாலையிலிருந்து தஞ்சாவூா் செல்லும் வழியில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெறும் பகுதியில் உள்ள அணுகு சாலையில் மழைநீா் தேங்கியது.
குண்டும் குழியுமான இந்த சாலையால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனா். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் சேதமடைந்த பகுதியை பாா்வையிட்டு, சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டுநா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.