செய்திகள் :

"ஓணம் பண்டிகைக்கான சிறப்பு விடுமுறை ரத்தா?" - கேரள அமைச்சர் சிவன்குட்டி விளக்கம்!

post image

கேரளாவில் ஓணம் (Onam) மிகப்பெரிய பாரம்பரிய திருவிழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. மகாபலி மன்னரை (மாவேலி) நினைவுகூர்ந்து கேரளாவின் அனைத்து மதத்தினரும் 10 நாள் கொண்டாட்டமாகச் சிறப்பிக்கும் திருவிழா இது.

பூக்களம் - பூக்களால் தரையில் அலங்காரம், ஓணசத்யா - வாழையிலையில் பரிமாறப்படும் சிறப்பு விருந்து, வல்லம் களி - படகுப் போட்டி மற்றும் பாரம்பரிய நடனங்கள், இசை, விளையாட்டுகள் என பலவிதமாகக் கொண்டாடப்படுகிறது.

ஓணம் | Onam

கேரள அரசு ஒணத்தை மாநிலத்தின் மிகப்பெரிய திருவிழாவாக அறிவித்திருப்பதால், பொதுவாக பத்தாம் நாளான திருவோணம் நாள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு செப்டம்பர் 4, 2025, செப்டம்பர் 5, 2025 அரசு விடுமுறையாகவும், பிற நாள்களான ஆகஸ்ட் 27, 2025 தொடக்கம் முதல் செப்டம்பர் 8, 2025 வரை சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு உள்ளூர் விடுமுறையாக வழங்கப்படுகிறது.

இந்நிலையில் இந்தாண்டு திடீரென ஓணத்திற்கு வழக்கமாக வழங்கப்படும் விடுமுறைகள் ரத்து செய்யப்படுவதாகவும், குறைக்கப்படுவதாகவும் சமூகவலைதளங்களில் தகவல்கள் பரவி பேசுபொருளாகியிருக்கின்றன.

கேரள அமைச்சர் சிவன்குட்டி

இதனால் கேரள மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் குழப்பத்தை தெளிவுபடுத்தும் விதமாக கேரளாவின் கல்வித் துறை அமைச்சர் சிவன்குட்டி, ஓணத்திற்கு வழக்கம்போல விடுமுறை அளிக்கப்படும் என்றும் போலியான தகவல்களை நம்பவேண்டாம் என்றும் கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

"இந்து பையனுக்கும், இஸ்லாமிய பெண்ணுக்கும் காதல் திருமணம் செய்து வைப்பார்களா?" - சீமான் கேள்வி

ஆணவக்கொலைக்கு எதிராக தனிச்சட்டம் இயற்ற தமிழக அரசை வலியுறுத்தி நடந்த கருத்தரங்கில் பேசிய மார்கிஸ்ட் கம்பூனிஸ்ட் கட்சியின் தலைவர் பெ.சண்முகம், கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களில் காதல் திருமணங்கள் நடத்தி வை... மேலும் பார்க்க

Transgender’s hostel: கேரளாவில் முதன்முறையாக தொடங்கப்பட்ட திருநங்கை மாணவர்கள் விடுதி!

கேரளாவில் திருநங்கை மாணவர்களுக்காக முதல்முறையாக தனிச்சிறப்பு விடுதி இன்று ஆகஸ்ட் 26ம் தேதி தொடங்கப்பட்டிருக்கிறது. கோட்டயத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட இந்த விடுதிக்கு ... மேலும் பார்க்க

"விமானத்தைக் கண்டுபிடிப்பதற்கு முன்பே நம்மிடம் புஷ்பக விமானம் இருந்தது" - பாஜக அமைச்சர் பேச்சு

சமீபத்தில்பாஜக எம்.பி அனுராக் தாகூர், தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு இமாசல பிரதேசத்தில் உள்ள பி.எம் ஶ்ரீ பள்ளி ஒன்றில்மாணவர்களிடம் உரையாடும் போது, "விண்வெளிக்கு முதன் முதலில் சென்றது அனுமன் ஜி தான்... மேலும் பார்க்க

ஆ.ராசா திறந்துவைத்த பஸ் ஸ்டாப்; `கட்டுமான செலவை விட விளம்பர செலவு அதிகம்போல...'- எழுந்த விமர்சனம்!

நீலகிரி மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையான அரசு மருத்துவக் கல்லூரி கனவு தற்போது சாத்தியப்பட்டிருக்கிறது. ஊட்டியில் உள்ள இந்த அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான நோயாள... மேலும் பார்க்க

பஞ்சாப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்; முதல்வர் நெகிழ்ச்சிப் பதிவு; பஞ்சாப் முதல்வர் சொன்னது என்ன?

முதல்வர் ஸ்டாலினின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று பள்ளிகளில் காலை உணவுத் திட்டம். இந்தத் திட்டத்தை 15.9.2022 அன்று மதுரை, ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மாணவர்களுக்கு கா... மேலும் பார்க்க

நெல்லை ஆணவக் கொலை: கவின்குமார் தந்தையுடன் முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்த திருமாவளவன்; நடந்தது என்ன?

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கவீன்குமாரின் தந்தை சந்திரசேகரை அழைத்துக் கொண்டு தமிழ்நாடு முதல்வர மு.க ஸ்டாலினை தலைமை செயலகத்தில் வைத்து சந்தித்திருக்கிறார் வி.சி.க தலைவர் திருமாவளவன். கவினின் குடு... மேலும் பார்க்க