Transgender’s hostel: கேரளாவில் முதன்முறையாக தொடங்கப்பட்ட திருநங்கை மாணவர்கள் விடுதி!
கேரளாவில் திருநங்கை மாணவர்களுக்காக முதல்முறையாக தனிச்சிறப்பு விடுதி இன்று ஆகஸ்ட் 26ம் தேதி தொடங்கப்பட்டிருக்கிறது. கோட்டயத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட இந்த விடுதிக்கு 'வெம்பநாடு' என பெயரிடப்பட்டுள்ளது. கேரள மாநில சமூகநீதி அமைச்சர் ஆர்.பிந்து இதைத் தொடங்கிவைத்திருக்கிறார்.
திருநங்கை மாணவர்களில் பலர், தங்கள் வீடுகளிலிருந்து ஆதரவு பெற முடியாமல், வாடகை வீடுகளிலும், பாகுபாடு மற்றும் நிதி சிரமங்களால் தங்க முடியாமல் தவிக்கும் சூழலில் படித்து வருகின்றனர். அவர்களின் கல்வியை ஊக்கப்படுத்தவும், தங்கிப் படிப்பதற்கும் உதவியாக இவ்விடுதி அமைக்கப்பட்டிருக்கிறது. முதற்கட்டமாக சிறிய கட்டடமாக அமைக்கப்பட்டிருக்கும் இந்த திருநங்கை மாணவர்களுக்கான தனிச் சிறப்பு விடுதி வரும் காலங்களில் பல கல்லூரி, பள்ளிகளில் விரிவுப்படுத்தப்படும் என்று அரசு தரப்பில் கூறப்படுகிறது.

இது குறித்துப் பேசியிருக்கும் கேரள மாநில சமூகநீதி அமைச்சர் ஆர்.பிந்து, "திருநங்கை மாணவர்களுக்கென அமைக்கப்பட்டிருக்கும் இந்தத் தனிச் சிறப்பு விடுதி வராலாற்றில் என்றும் நிலைத்திருக்கும். திருநங்கை மாணவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருவதால், அவர்களுக்கென தனிச் சிறப்பு வசதி பெற்ற விடுதிகள் அவசியம். சமூகத்தால், குடும்பத்தால் கைவிடப்பட்ட அவர்களுக்கு இது போன்ற உதவிகள் கல்வி கற்பதற்கான நல்ல சூழலை ஏற்படுத்திக்கொடுத்து ஊக்கமளிப்பதாக இருக்கும்" என்று பேசியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs