லிவர்பூல் கால்பந்து அணியின் வரலாற்றில் முதல்முறை... சாதனையுடன் முன்னேற்றம்!
லிவர்பூல் கால்பந்து அணி முதல்முறையாக தொடர்ச்சியாக 22 அவே (வெளியூர்) போட்டிகளில் கோல் அடித்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.
மொத்தமாக ஹொம் (உள்ளூர்) மற்றும் அவே போட்டிகளில் 36 போட்டிகளில் கோல் அடித்து அசத்தியுள்ளது.
இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியர் லீக்கின் சமீபத்திய போட்டியில் லிவர்பூல் அணி 3-0 என நியூகேஸ்டன் அணியை வென்றது.
பிரீமியர் லீக்கின் நடப்பு சாம்பியனாக இருக்கும் லிவர்பூல் அணி தனது கிளப் வரலாற்றிலேயே முதல்முறையாக 22 அவே (வெளியூர்) போட்டிகளில் ஒரு கோல் ஆவது அடித்து சாதனை படைத்துள்ளது.
இந்த சாதனை கடந்த ஏப்.2024-இல் அர்னே ஸ்லாட் தலைமையில் தொடங்கியது.
பிரீமியர் லீக் வரலாற்றில் ஆர்செனல் அணி தொடர்ச்சியாக 27 போட்டிகளில் வென்று சாதனை படைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.