வாக்குத் திருட்டு: திருடன் மாட்டிக்கொண்டால் அமைதியாகவே இருப்பான்! -பாஜகவை விமர்ச...
தீயான வியப்பு காத்திருக்கிறது... ஹரிஷ் கல்யாண் பகிர்ந்த டீசல் பட அப்டேட்!
ஹரிஷ் கல்யாணின் டீசல் படத்தின் டீசர் வெளியீடு குறித்து படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.
சண்முகம் முத்துசாமி இயக்கியுள்ள இப்படத்தினை எஸ்பி சினிமாஸ் தயாரித்துள்ளது.
இந்தப் படத்தில் அதுல்யா ரவி நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் வினய், கருணாஸ் மற்றும் அனன்யா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ள இந்தப்படம் பான் இந்திய படமாக உருவாகியுள்ளது.
ஹரிஷ் கல்யாண் நடித்த 'பார்க்கிங்' படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. 5 மொழிகளில் ரீமேக் ஆகியது. இதற்காக தேசிய விருது கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், டீசல் படத்தின் டீசர் நாளை மாலை 4.02 மணிக்கு வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது.
A fiery suprise awaits you all. ❤️#Diesel teaser from tomorrow 4.02 pm pic.twitter.com/J2ryjPCJMR
— Harish Kalyan (@iamharishkalyan) August 26, 2025