நுங்கம்பாக்கம் கல்லூரிப்பாதையை ‘ஜெய்சங்கர் சாலை’ எனப் பெயர் மாற்ற அனுமதி: அரசாணை வெளியீடு
சென்னை: சென்னை மாநகரின் முக்கியச் சாலைகளுள் ஒன்றான நுங்கம்பாக்கம் கல்லூரிப்பாதைக்கு ‘ஜெய்சங்கர் சாலை’ எனப் பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை, நுங்கம்பாக்கம் கல்லூரிப்பாதையை 'ஜெய்சங்கர் சாலை' என மாற்ற மாநகராட்சி ஆணையருக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இந்த கல்லூரிப் பாதையில் நடிகர் ஜெய்சங்கர் 1964 - 2000 வரை வசித்து வந்தார். இந்த நிலையில், நடிகர் ஜெய்சங்கரின் மகன் விஜய் சங்கர் முதல்வர் மு. க. ஸ்டாலினிடம் இது குறித்து கோரிக்கை விடுத்திருந்த நிலையில், சாலைக்கு பெயர் மாற்ற மாநகராட்சி ஆணையருக் அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.