செய்திகள் :

திருப்புவனம் அஜித் குமார் மரண வழக்கு: தனிப்படை காவலர்கள் 5 பேருக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

post image

மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமாா் கொலை வழக்கில், விசாரணையில் சிறையில் உள்ள தனிப்படை காவலர்கள் 5 பேருக்கு 29-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு கடந்த ஜூன் 27-ஆம் தேதி வந்த பேராசிரியை நிகிதா, தனது காரில் வைத்திருந்த நகைகள் காணாமல் போனதாக திருப்புவனம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதையடுத்து, அந்தக் கோயில் காவலாளி அஜித்குமாரை தனிப் படை போலீஸாா் 5 போ் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கியதில் அவா் உயிரிழந்தாா்.

இதுதொடா்பான வழக்கில் தனிப் படைக் காவலா்கள் கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கரமணிகண்டன் ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா். இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரிக்கின்றனா்.

இந்த நிலையில், சிறையில் உள்ள தனிப்படை காவலர்கள் 5 பேருக்கு 29-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.

Ajith Kumar Death Case in Thiruppuvanam: Court custody extended until the 29th for 5 special police personnel in jail - Madurai District Court

நுங்கம்பாக்கம் கல்லூரிப்பாதையை ‘ஜெய்சங்கர் சாலை’ எனப் பெயர் மாற்ற அனுமதி: அரசாணை வெளியீடு

சென்னை: சென்னை மாநகரின் முக்கியச் சாலைகளுள் ஒன்றான நுங்கம்பாக்கம் கல்லூரிப்பாதைக்கு ‘ஜெய்சங்கர் சாலை’ எனப் பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.சென்னை, நுங்கம்பாக்கம் கல்லூரிப்பாதையை 'ஜெய்ச... மேலும் பார்க்க

திட்டமிட்டதற்கு முன்பே பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சோதனை நிறைவு!

சென்னை பூந்தமல்லி - போரூர் இடையிலான மெட்ரோ ரயில் வழித்தடங்களுக்கு பாதுகாப்பு சான்றிதழ்கள் பெறுவதற்கான சோதனை நிறைவடைந்தாக மெட்ரோ ரயில் நிர்வாகம் கூறியுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் க... மேலும் பார்க்க

நீலகிரி, கோவையில் 3 நாள்களுக்கு கனமழை!

தமிழகத்தில் இரண்டு மாவட்டங்களில் 3 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. • இன்று (26-08-2025) காலை 5.30 மணியளவில், ஒரிசா கடலோரப்பகுதியை தாண்டி வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளி... மேலும் பார்க்க

அரவக்குறிச்சி முன்னாள் எம்எல்ஏ கலிலூர் ரகுமான் காலமானார்!

அரவக்குறிச்சி முன்னாள் எம்எல்ஏ கலிலூர் ரகுமான் வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக இன்று(ஆக.27) காலை காலமானார். அவருக்கு வயது 79.கரூர் மாவட்டம், பள்ளப்பட்டியில் அப்துல் சலாம் என்பவருக்கு மகனாக... மேலும் பார்க்க

ஆம்பூர் கலவர வழக்கில் தீர்ப்பு! 2 எஸ்.பி.க்கள் தலைமையில் 1,000 காவலர்கள் குவிப்பு!

ஆம்பூர் கலவர வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் 2 எஸ்.பி.க்கள் தலைமையில் 1000-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட... மேலும் பார்க்க

பஞ்சப்பூரில் எனக்கு சொந்தமாக 300 ஏக்கர் நிலமா? கே.என். நேரு பதில்

திருச்சி: திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் எனக்கு சொந்தமாக 300 ஏக்கர் நிலம் இருந்தால் அதனை யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என்று அமைச்சர் கே.என். நேரு கூறியிருக்கிறார்.விரிவுபடுத்தப்பட்ட காலை உண... மேலும் பார்க்க