செய்திகள் :

ஜம்மு - காஷ்மீரில் நிலச்சரிவு: 5 பேர் பலி; 14 பேர் படுகாயம்

post image

ஜம்மு - காஷ்மீரில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலியாகினர். மேலும், 14 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர் மழை காரணமாக கத்ரா பகுதியிலுள்ள வைஷ்ணவி தேவி கோயில் அருகே நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

தொடர் மழை காரணமாக ஜம்மு - காஷ்மீரின் ரியாசி மாவட்டத்திற்குட்பட்ட கத்ரா பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. வைஷ்ணவி தேவி கோயில் அருகே உள்ள குகைக்கோயிலில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் சிக்கியதாக இதுவரை 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 14 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கத்ரா வருவாய் கோட்டாட்சியர் பியூஷ் தோத்ரா கூறியதாவது, ''நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 5 உடல்கள் மீட்கப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 10 முதல் 14 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இது தொடர்பாக கூடுதல் தகவல்கள் கிடைத்த பிறகே விரிவாகக் கூற இயலும்'' எனக் குறிப்பிட்டார்.

இதேபோன்று வைஷ்ணவி தேவி கோயில் வாரியம் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,

''அத்க்வாரி பகுதியிலுள்ள இந்திரபிராஸ்தா போஜனாலயாவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சிலர் படுகாயம் அடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தேவையான உபகரணங்கள், இயந்திரங்களுடன் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன'' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்லு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு

தொடர் மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக ஜம்மு - காஷ்மீரில் 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளதால், மண் அரிப்பும் ஏற்பட்டு வருகிறது.

கதுவா மாவட்டத்தில் ஆக. 11ஆம் தேதி ஏற்பட்ட மேகவெடிப்பில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். 11 பேர் படுகாயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | மாசுபாட்டைக் குறைக்க பள்ளிப் பேருந்துகள் மின்சாரத்தில் இயங்க வேண்டும்: ரேகா குப்தா

J-K: Five killed, 10 injured in landslide near Vaishno Devi shrine; heavy rains disrupt trains, traffic in Jammu

விமானப் பணியாளரைத் தாக்கிய ராணுவ அதிகாரி மீது நடவடிக்கை: 5 ஆண்டுகள் விமானத்தில் பறக்க தடை!

விமானப் பணியாளரைத் தாக்கிய ராணுவ அதிகாரிக்கு 5 ஆண்டுகள் விமானத்தில் பறக்க தடை தடை விதித்து டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது.ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகா் விமான நிலையத்தில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் 4 ஊழியா்களை தாக்... மேலும் பார்க்க

விலை உயர்ந்த வாக்குரிமையைத் திருட அனுமதிப்பதா? பிரியங்கா

வாக்களிப்பதுதான் குடிமக்களின் விலை உயர்ந்த உரிமை, அதனை நாம் திருட அனுமதிப்பதா? என காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான முறைகேடுகளுக்கு எதிர்... மேலும் பார்க்க

வாக்குத் திருட்டு: திருடன் மாட்டிக்கொண்டால் அமைதியாகவே இருப்பான்! -பாஜகவை விமர்சிக்கும் ராகுல்

வாக்குத் திருட்டு விவகாரத்தில் பாஜகவை விமர்சித்து பேசியுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, திருடன் மாட்டிக்கொண்டால் அமைதியாகவே இருப்பான் என்றார்.வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான முற... மேலும் பார்க்க

கேரளத்தில் அமீபா தொற்றால் மூளை பாதிப்பு: நோயாளிகள் எண்ணிக்கை 18-ஆக உயர்வு!

கேரளத்தில் அமீபா தொற்றால் மூளை பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 18-ஆக உயர்ந்துள்ளது.திருவனந்தபுரம், கொல்லம், கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் இந்த பாதிப்பு அதிகர... மேலும் பார்க்க

குஜராத்தில் உருவானது வாக்குத்திருட்டு; 2014-ல் தேசிய அளவில் பரவியது: ராகுல் காந்தி

குஜராத்தில் உருவான வாக்குத்திருட்டு 2014 ஆம் ஆண்டு தேர்தலில் தேசிய அளவில் நடந்ததாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சி வாக்குத்திருட்டில் ஈட... மேலும் பார்க்க

பாலியல் குற்றச்சாட்டில் எம்எல்ஏ இடைநீக்கம்: ‘பிற கட்சிகளுக்கு காங். முன்னுதாரணம்!' -வி.டி.சதீஷன்

கேரள அரசியல் வரலாற்றில் பிற கட்சிகளுக்கு காங்கிரஸ் முன்னுதாரணமாக விளங்குவதாக கேரள சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் வி. டி. சதீஷன் செவ்வாய்க்கிழமை (ஆக. 26) தெரிவித்தார். அண்மையில் மலையாள நடிகை ரினி ஆன... மேலும் பார்க்க