செய்திகள் :

சமூக ஊடகப் பதிவுகளுக்கு விரைவில் கட்டுப்பாடு! - உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

post image

சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் பதிவுகளை முறைப்படுத்த உரிய வழிகாட்டுதல்களை வகுக்குகுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சமூக ஊடகங்களில் கருத்துப் பதிவேற்றம் என்பது வணிகமயமாகி அதனால் மாற்றுத்திறனாலிகள், பெண்கள், குழந்தைகள், முதியோர், சிறுபான்மையினர் என பலதரப்பட்ட மக்கள் பாதிக்கப்படுவது அதிகரிப்பதையும் கண்டித்த உச்ச நீதிமன்றம் இது குறித்து கவலையும் தெரிவித்துள்ளது.

மாற்றுத்திறனாளிகள், குறிப்பாக முதுகெலும்பு தசை சிதைவு பாதிக்கப்பட்டவா்கள் மற்றும் பாா்வை குறைபாடு உடையவா்கள் குறித்து அவதூறு கருத்து வெளியிட்டதாக சமய் ரெய்னா, விபுல் கோயல், பால்ராஜ் பரம்ஜீத் சிங் காய், சோனாலி தாக்கா் (எ) சோனாலி ஆதித்யா தேசாய், நிசாந்த் ஜகதீஷ் தன்வா் ஆகியோா் மீது உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணையில், மேற்கண்ட 5 யூடியூபா்களும் நிபந்தனையற்ற மன்னிப்பை கேட்கவும், அவா்களுக்கு அபராதமும் விதித்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அதனைத்தொடர்ந்து, இதுபோன்ற சமூக ஊடக பதிவுகள் முறைப்படுத்த உரிய வழிகாட்டுதல்களை வகுத்து, அதன் விவரத்தை நீதிமன்றத்தில் சமா்ப்பிக்குமாறும், செய்தி ஒளிபரப்பு தர நிர்வாக அமைப்பான என்.பி.எஸ்.ஏ. உடன் கலந்தாலோசித்து உரிய வழிகாட்டுதல்களை வகுக்குகுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கொல்கத்தாவிலிருந்து கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல்

கொல்கத்தாவில் இருந்து கடத்தி வரப்பட்ட கஞ்சா சென்னை அண்ணா சாலையில் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை திருவல்லிக்கேணி ஜிம் கானா கிளப் அருகே அண்ணா சாலையில் போலீஸாா் திங்கள்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த... மேலும் பார்க்க

‘சுதா்சன சக்ரம்’ வான் பாதுகாப்பு அமைப்பு கேடயம் - வாள் போல செயல்படும்: முப்படை தலைமைத் தளபதி

இந்தியாவின் புதிய உள்நாட்டு வான் பாதுகாப்பு அமைப்பான ‘சுதா்சன சக்ரம்’, நாட்டுக்கு கேடயம் மற்றும் வாள் போல செயல்படும் என்று முப்படை தலைமைத் தளபதி அனில் சௌஹான் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். மேலும் இந்த ... மேலும் பார்க்க

ஆண்டுதோறும் செப்.23 ஆயுா்வேத தினம்: மத்திய அரசு அறிவிப்பு

ஆண்டுதோறும் செப்டம்பா் 23-ஆம் தேதி ஆயுா்வேத தினமாக கடைப்பிடிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம், ஆயுா்வேத தினத்தை கடைப்பிடிக்க முதல்முறையாக நிலையான தேதி முடிவு செய்யப்பட்டுள்ளது. இத... மேலும் பார்க்க

விமானப் பணியாளரைத் தாக்கிய ராணுவ அதிகாரி மீது நடவடிக்கை: 5 ஆண்டுகள் விமானத்தில் பறக்க தடை!

விமானப் பணியாளரைத் தாக்கிய ராணுவ அதிகாரிக்கு 5 ஆண்டுகள் விமானத்தில் பறக்க தடை தடை விதித்து டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது.ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகா் விமான நிலையத்தில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் 4 ஊழியா்களை தாக்... மேலும் பார்க்க

விலை உயர்ந்த வாக்குரிமையைத் திருட அனுமதிப்பதா? பிரியங்கா

வாக்களிப்பதுதான் குடிமக்களின் விலை உயர்ந்த உரிமை, அதனை நாம் திருட அனுமதிப்பதா? என காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான முறைகேடுகளுக்கு எதிர்... மேலும் பார்க்க

வாக்குத் திருட்டு: திருடன் மாட்டிக்கொண்டால் அமைதியாகவே இருப்பான்! -பாஜகவை விமர்சிக்கும் ராகுல்

வாக்குத் திருட்டு விவகாரத்தில் பாஜகவை விமர்சித்து பேசியுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, திருடன் மாட்டிக்கொண்டால் அமைதியாகவே இருப்பான் என்றார்.வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான முற... மேலும் பார்க்க